சென்னையில் பலத்த சூறைக்காற்று; நள்ளிரவில் கொட்டி தீர்த்த கனமழை.. எங்கு? எவ்வளவு?

சென்னையில் சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்தது. மேடவாக்கம், மடிப்பாக்கம், நங்கநல்லூர், போரூர், ராமாவரம், வளசரவாக்கம் உள்ளிட்ட இடங்களில் பலத்த சூறைக்காற்று வீசியதால் மக்கள் அச்சம்.

Continues below advertisement

சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று நள்ளிரவு 2 மணி தொடங்கி மூன்று மணி நேரத்திற்கு மேலாக இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. மேடவாக்கம், மடிப்பாக்கம், நங்கநல்லூர், போரூர், ராமாவரம், வளசரவாக்கம் உள்ளிட்ட இடங்களில் பலத்த சூறைக்காற்று வீசியதால் மக்கள் பெரும் அச்சம் அடைந்தனர்.

Continues below advertisement

சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை: கேரள கடலோர பகுதிகளிலும் தென்கிழக்கு அரபிக்கடலிலும் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாள்களாக தமிழ்நாட்டின் பல இடங்களில் அவ்வப்போது மிதமானது முதல் கன மழை பெய்து வருகிறது.

குறிப்பாக, சென்னையில் அடுத்த இரு தினங்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதற்கிடையே சென்னையில் பகல் நேரத்தில் 38 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும் என்றும் இரவு நேரத்தில் மிதமான மழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இப்படிப்பட்ட சூழலில், சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் நேற்று நள்ளிரவு 2 மணி தொடங்கி சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்தது. போரூர், ராமாவரம், வளசரவாக்கம், மேடவாக்கம், மடிப்பாக்கம், நங்கநல்லூர், கிண்டி, அசோக் நகர், ஆலந்தூர், மேற்கு மாம்பலம், கோடம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சூறைக் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.

எங்கெல்லாம் கனமழை பெய்தது? மழை பெய்தபோது, இடி மற்றும் மின்னலின் தாக்கம் கடுமையாக இருந்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். அதே போல குன்றத்தூர், தாம்பரம், அனகாபுத்தூர் உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது.

இதனால் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சுமார் மூன்று மணி நேரத்துக்கும் மேலாக பெய்த இந்த திடீர் மழையால் பல இடங்களில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியது. சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

சென்னையில் அதிகபட்சமாக பூந்தமல்லியில் 10.4 செ.மீ மழையும், சோழிங்கநல்லூரில் 8.2 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

இதையும் படிக்க: TN Weather Update: அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை இருக்கும்.. வானிலை சொல்வது என்ன ?

Continues below advertisement