தண்டையார்பேட்டை காவல்துறையினர் நேற்று முன்தினம் இரவு வண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் தியாகராய மெட்ரோ ரயில் நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அங்கு 2 பேர் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்தனர். அவர்களை பிடித்து விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணாக காவல்துறையினரிடம் பதிலளித்துள்ளனர்.


இதனால், அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் போதை மாத்திரைகள், ஊசிகள், ஸ்டெர்ய்ல் தண்ணீர் பாட்டில்கள் இருந்தன. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் அவற்றை பறிமுதல் செய்து, 2 பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். 


அதில் அவர்கள் தரமணி பாரதியார் நகர் பரணி தெருவை சேர்ந்த 23 வயதான சூர்யா, கீழ்கட்டளை ஈஸ்வரன் நகரை சேர்ந்த 28 வயதான ராஜ்குமார் என்பதும் தெரியவந்தது. மேலும், இவர்கள் வண்ணாரப் பேட்டை, தண்டையார்பேட்டை, புது வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர், காசிமேடு, ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் போதை மாத்திரை, ஊசி ஆகியவற்றை விற்பனை செய்து வந்ததும் தெரிந்தது.


மேலும், ஆன்லைன் ஆர்டர் மூலம் மும்பையில் இருந்து போதை மாத்திரை, ஊசிகளை மொத்தமாக வாங்கியதும், இவர்களுக்கு போன் மூலமாகவோ அல்லது வாட்ஸ்அப் மூலமாகவோ போதை மாத்திரை, ஊசி வேண்டும் என்று தகவல் அனுப்பினால் நேரில் வந்து விற்பனை செய்ததும் தெரியவந்தது.


மேலும், இந்த மாத்திரையை, ஸ்டெர்ய்ல் தண்ணீரில் கரைத்து ஊசியில் ஏற்றி உடலில் செலுத்தினால், ஒருவருக்கு பல மணி நேரம் போதை இருக்கும் என்பதும் தெரியவந்தது. இவர்களிடம் இருந்து 1300 போதை மாத்திரைகள், 15 ஊசிகள், ஸ்டெர்ய்ல் தண்ணீர் பாட்டில்கள், 2 செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து  இருவரையும் சிறையில் அடைத்தனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண