காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சின்ன மதுரபாக்கம் பகுதியில் வசித்துவருபவர் கோவிந்தராஜ் (40), கீதா (35) தம்பதி. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மூன்று மகள்கள் என நான்கு பிள்ளைகள் உள்ளனர். கோவிந்தராஜ் தினக் கூலியாக பல்வேறு வேலை செய்து வந்தோம் நிரந்தரமாக எந்த வேலையும் கிடைக்காமல் இருந்து வந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் கோவிந்தராஜ் குடிபோதைக்கு அடிமையாகி உள்ளார். இவர், அவ்வப்போது குடித்துவிட்டு வீட்டிற்கு சென்று தனது மனைவியுடன் மற்றும் மகள்களுடன் சண்டையிடுவதை வழக்கமாக கொண்டு வந்துள்ளார்.

 



 

இந்நிலையில் கடந்த மாதம் இவருடைய தொல்லை தாங்காமல், 14 வயது சிறுமி நதியா தீயிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதைத்தொடர்ந்து மீண்டும் மது போதையில், எப்போது இருக்கும் கோவிந்தராஜ் தனது குடும்பத்தாருடன் தொடர்ச்சியாக சண்டையிட்டு வந்துள்ளார். இந்நிலையில் இன்று இவருடைய மூத்த மகள் 16 வயதான நந்தினி (11ஆம் வகுப்பு படித்து வருகிறார் ),  9 வயது சிறுமி தீபா (நான்காம் வகுப்பு ) இருவரும் வீட்டில் இருந்து இருக்கிறார்கள். வழக்கம்போல் இன்றும் பகலில், ஓரகடம் டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடித்துவிட்டு அதிக போதையில் வீட்டுக்கு வந்துள்ளார். "மகள்களிடம் உங்களை என்னால் காப்பாற்ற முடியாது செத்துத் தொலையுங்கள்" என சண்டையிட்டு உள்ளார்.



 

மகள்களும் தந்தையை எதிர்த்து பேசியதால், மது போதையில் இருந்த கோவிந்தராஜ், அங்கிருந்த கட்டையால் இரு மகள்களையும் கொடூரமாக தாக்கி அடித்து கொலை செய்து இருக்கிறார். சிறுமிகளின் அலறல் சத்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள்  கோவிந்தராஜ், பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்திருக்கிறார்கள். மது போதையில் தனது இரு மகன்களையும் அடித்துக்கொன்ற தந்தையால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிறுமிகளின் தாயார் வேலைக்கு சென்றிருந்த வேளையில் இச்சம்பவம் நடைபெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல முறை தந்தை கோவிந்தராஜ் தனது தாயை அடிக்கும் பொழுது, சிறுமிகள் இருவரும் தட்டிக் கேட்டு தந்தையிடம் சண்டையிட்டு வந்துள்ளனர்.



மேலும் மூன்று பெண்குழந்தைகள் என்பதால் கோவிந்தராஜ் மிகவும் கவலையில் இருந்துள்ளார். குறிப்பாக கோவிந்தராஜ் தான் பெற்ற மகள்களிடம்,  "என்னால் உங்களை கட்டி கொடுக்க முடியாது, செத்துத் தொலையுங்கள்" என திட்டி கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இரண்டு மகள்களையும் தந்தை கொலை செய்து இருக்கும் சம்பவம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவிந்தராஜிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.