போக்குவரத்து மாற்றம்:
சென்னையில் சாதாரணமாகவே போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். அதுவும் வார நாட்களில் பீக் நேரங்களில் சென்னை சாலைகளில் நிலையை பற்றி சொல்லவே வேண்டாம். அந்த அளவுக்கு நெரிசால் அதிகமாக இருக்கும். வாகனங்கள் சாரை சாரையாக ஊர்ந்து செல்வதை காண முடியும். சாரணமாகவே இப்படி இருக்கும் நிலையில், தற்போது மெட்ரா பணிகள், சாலை விரிவாக்க பணிகள் என ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வரிசையில் தற்போது இன்று முதல் குறிப்பிட்ட சில பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்தெந்த இடங்கள்?
இதுகுறித்து வெளியான செய்திகுறிப்பில், ”தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகன போக்குவரத்தை எளிதாக்கவும், போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் தாம்பரம் மாநகர போக்குவரத்துக் காவல் துறையால் ஜிஎஸ்டி சாலை-சரவணா ஸ்டோர்ஸ் சந்திப்பு மற்றும் ஜிஎஸ்டி சாலை பல்லாவரம் நகராட்சி சந்திப்புகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு 09.11.2023 முதல் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி,
1. ஜிஎஸ்டி சாலை X சரவணா ஸ்டோர் சந்திப்பு
- ஜிஎஸ்டி சாலையில் பல்லாவரத்தில் இருந்தும் ரேடியல் சாலையிலிருந்தும் வரும் வாகனங்கள் குரோம்பேட்டை சரவணா ஸ்டோர் சந்திப்பில் U Turn செய்து சென்னைக்கு செல்லவும். அதேபோல் தாம்பரத்தில் இருந்து பல்லாவரம் நோக்கி வரும் வாகனங்கள் குரோம்பேட்டை சரவணா ஸ்டோர் சந்திப்பில் U Turn செய்து தாம்பரம் நோக்கி செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
- அதற்கு பதிலாக பல்லாவரத்தில் இருந்து வரும் வாகனங்கள் MIT மேம்பாலம் வழியாக ஜிஎஸ்டி சாலை திரும்பி சென்னைக்கு செல்லலாம். தாம்பரம் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் திருநீர்மலை மேம்பாலம் சென்று திரும்பி மீண்டும் தாம்பரம் நோக்கி செல்லலாம்.
2. ஜிஎஸ்டி சாலை X பல்லாவரம் நகராட்சி சந்திப்பு
- ஜிஎஸ்டி சாலையில் கிண்டி, பல்லாவரத்தில் இருந்தும் ரேடியல் சாலையிலிருந்தும் வரும் வாகனங்கள் பல்லாவரம் நகராட்சி சந்திப்பில் U Turn செய்து சென்னைக்கு செல்லவும், வலதுபுறம் திரும்பி பல்லாவரம் நகராட்சி சாலைக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
- அதேபோல், தாம்பரத்தில் இருந்து பல்லாவரம் நோக்கி வரும் வாகனங்கள் பல்லாவரம் நகராட்சி சந்திப்பில் U Tum செய்து தாம்பரம் நோக்கி செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக பல்லாவரத்தில் இருந்து வரும் வாகனங்கள் MIT மேம்பாலம் வழியாக ஜிஎஸ்டி சாலை திரும்பி சென்னைக்கு செல்லலாம்.
- தாம்பரம் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் திருநீர்மலை மேம்பாலம் சென்று திரும்பி மீண்டும் தாம்பரம் நோக்கி செல்லலாம். மேற்கண்ட விவரங்களை வாகன ஒட்டிகள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
TN Rain Alert: சென்னையில் கொட்டும் மழை.. அடுத்த 3 மணி நேரத்தில் 19 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை..