தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, சிவகங்கை, ராமநாதபுரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


மேலும், மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு  பகுதி  உருவாகியுள்ளது. இது மேற்கு திசையில் நகர்ந்து, அதே பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் வலுவிழக்கக்கூடும். அதுமட்டுமின்றி குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என வானிலை மையம் கணித்துள்ளது. நாளை, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 14 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஓரிரு  இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான   வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.  நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான /  மிதமான மழை  பெய்யக்கூடும்.  அதிகபட்ச வெப்பநிலை 32-33 செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸாகவும்  இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


சென்னையில் நேற்று வெயிலில் தாக்கம் சற்று அதிகமாக இருந்த நிலையில், இன்று காலை முதல் லேசான முதல் மிதமான மழை பெய்து வருகிறது. நகரின் அனேக பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மேலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.


கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு (செண்டிமீட்டரில்):


கில் கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்) 23, பில்லூர் அணை மேட்டுப்பாளையம் (கோவை மாவட்டம்) 15, மூலைக்கரைப்பட்டி (திருநெல்வேலி மாவட்டம்) 14, நம்பியூர் (ஈரோடு மாவட்டம்), அவினாசி (திருப்பூர் மாவட்டம்) 12, ஆழியார் (கோவை மாவட்டம்) 11, கோயம்புத்தூர், பெரியநாயக்கன்பாளையம் (கோவை மாவட்டம்) தலா 10, வாட்ராப் (விருதுநகர் மாவட்டம்), தூத்துக்குடி பி.டி.ஓ (தூத்துக்குடி மாவட்டம்), பவானிசாகர் (ஈரோடு மாவட்டம்), விருதுநகர் (விருதுநகர் மாவட்டம்), ராஜபாளையம் (விருதுநகர் மாவட்டம்), அழகரை எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்) தலா 9,  கொத்தவாச்சேரி (கடலூர் மாவநீட்டம்), ஓட்டப்பதிரம் (தூத்துக்குடி மாவட்டம்), குன்னூர் பி.டி.ஓ (நீலகிரி மாவட்டம்), மேலூர் (மதுரை மாவட்டம்), பொதுப்பணித்துறை (திருப்பூர் மாவட்டம்), ஆண்டிபட்டி (தேனி மாவட்டம்), களியல் (கன்னியாகுமரி மாவட்டம்) தலா 8, கோவை தெற்கு, ராமநாதபுரம், பரங்கிப்பேட்டை (கடலூர் மாவட்டம்), குறிஞ்சிப்பாடி (கடலூர் மாவட்டம்), இடையபட்டி (மதுரை மாவட்டம்), ராமநாடு கேவிகே ஏடபிள்யூஎஸ் (ராமநாதபுரம் மாவட்டம்), மேட்டுப்பாளையம் (கோவை மாவட்டம்), பூதலூர் (தஞ்சாவூர் மாவட்டம்) , மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி மாவட்டம்), கடலாடி (ராமநாதபுரம் மாவட்டம்), களக்காடு (திருநெல்வேலி மாவட்டம்) தலா 7, செ.மீ மழை பதிவாகியுள்ளது.