Chennai Traffic Diversion: சென்னையில் நாளை மறுநாள் (செப்டம்பர் 3) குறிப்பிட்ட சில பகுதிகளில் அன்று ஒரு நாள் மட்டும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து மாற்றம்:
சென்னையில் சாதாரணமாகவே போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். அதுவும் வார நாட்களில் பீக் நேரங்களில் சென்னை சாலைகளில் நிலையை பற்றி சொல்லவே வேண்டாம். அந்த அளவுக்கு நெரிசால் அதிகமாக இருக்கும். வாகனங்கள் சாரை சாரையாக ஊர்ந்து செல்வதை காண முடியும். சாரணமாகவே இப்படி இருக்கும் நிலையில், தற்போது மெட்ரா பணிகள், சாலை விரிவாக்க பணிகள் என ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வரிசையில் தற்போது நாளை மறுநாள் (செப்டம்பர் 3) குறிப்பிட்ட சில பகுதிகளில் அன்று ஒரு நாள் மட்டும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்தெந்த இடங்கள்?
இதுகுறித்து சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வருகின்ற 03.09.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 05.00 மணி முதல் 07.30 மணி வரை 10 கி.மீ, 5 கி.மீ, 3 கி.மீ ஓட்டம் ஆல்காட் நினைவுப் பள்ளியில் தொடங்கி எம்.ஆர்.சி நகர் வரை சென்று மீண்டும் ஆல்காட் நினைவுப் பள்ளி வரை நடைபெற உள்ளதை முன்னிட்டு சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையால் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.
அடையார் உட்கோட்ட மாற்று வழிகள்:
- எல்.பி சாலையில் இருந்து பெசன்ட் நகர் கடற்கறை நோக்கி 3வது அவன்யு & 2வது அவன்யு அனைத்து உள்வரும் வாகனங்களும் ML முத்துலட்சுமி பார்க்கில் திருப்பி விடப்பட்டு, எல்.பி சாலை சாஸ்த்ரி நகர் 1வது பிரதான சாலை வழியாக கடற்கறை நோக்கி அனுப்பப்படும்.
- சாஸ்திரி நகர் பேருந்து நிலையத்திலிருந்து டாக்டர். முத்துலட்சுமி பார்க் நோக்கி வரும் அனைத்து பேருந்துகளும் (எம்டிசி பேருந்துகள் உட்பட) 7வது அவன்யூ சந்திப்பு- எம்ஜி சாலை- எல்பி சாலை வழியாக அவர்களது இலக்கை அடையலாம்.
மயிலாப்பூர் உட்கோட்ட மாற்று வழிகள்:
- மயிலாப்பூரில் இருந்து ஆர்.கே.மடம் சாலை வழியாக அடையாறு மற்றும் கிண்டி நோக்கி வரும் வாகனங்கள் தெற்கு கால்வாய் வங்கி சாலை மற்றும் கிரீன்வேஸ் சந்திப்பு வழியாக அனுமதிக்கப்பட மாட்டாது. அந்த வாகனகள் வி.கே.ஐயர் சாலை, ஆர்.ஏ.புறம் இரண்டாவது பிரதான சாலை. சேமியர்ஸ் சாலை, காந்தி மண்டபம் சாலை மற்றும் எஸ்.வி.படேல் சாலை வழியாக அவர்கள் இலக்கை அடையலாம்.
- கிரீன்வேஸ் சாலை மற்றும் ஆர்.கே.மடம் சாலையிலிருந்து செல்லும் வாகனங்கள் ஆர்.கே.பிராடீஸ் கோட்டை வழியாக டிஜிஎஸ் தினகரன் இசைக் கல்லூரி மற்றும் சாந்தோம் நோக்கி செல்லும் வாகனங்கள் வழக்கம் போல அனுமதிக்கப்படும். டிஜிஎஸ் தினகரன் சாலை மற்றும் இசைக் கல்லூரி சந்திப்பிலிருந்து எந்த வாகனமும் அடையாறு நோக்கி செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.