Today Powercut : சென்னையில் இன்று எங்கெல்லாம் மின்தடை தெரியுமா..? முழு விவரம் உள்ளே..!

Chennai Powercut : மின்பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் இன்று கீழ்க்கண்ட பகுதிகளில் மின்தடை செய்யப்பட உள்ளது.

Continues below advertisement

மின் விநியோகம் தடையின்றி விநியோகம் செய்வதற்காக மின் உபகரணங்களை மாதத்திற்கு ஒரு முறை பராமரிப்பு செய்வது வழக்கம். இதன்காரணமாக, மாதத்திற்கு ஒரு முறை காலை முதல் மாலை வரை மின்பராமரிப்பு செய்வதால் மின்தடை செய்யப்படுவது வழக்கம்.

Continues below advertisement

சென்னையில் இன்று மின் பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் மின்தடை செய்யப்பட உள்ளது. திருவேற்காடு மற்றும் பெரம்பூர் பகுதிகளில் இன்று மின்தடை செய்யப்பட உள்ளது.

திருவேற்காடு :

ஐஸ்வர்யா கார்டன், ஜெயலட்சுமி நகர், ஏ.சி.எஸ். மருத்துவ கல்லூரி, கூட்டுறவு நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.

பெரம்பூர் :

பேப்பர் மில்ஸ் சாலை, சபாபதி தெரு, மதுரைசுவுாமி மாடம் பிரதான தெரு, வாசுதேவன் தெரு, பேசர் அம்மன் கோவில் தெரு, ஸ்டேட் பாங்க் காலனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.

மேற்கண்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்பட உள்ளது. சில பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது.

காலை 9 மணி முதல் மின்தடை செய்யப்பட உள்ளதால் பொதுமக்கள் தங்களது செல்போன்களுக்கு சார்ஜ் போடுதல், பணிக்கு செல்வோர்கள் தங்களது துணிகளை அயர்ன் செய்வது உள்ளிட்ட பணிகளை விரைந்து செய்து முடித்துக்கொண்டால் சிரமத்தை தவிர்க்கலாம்.  


தமிழ்நாட்டில் 8 ஆண்டுகளுக்கு பிறகு மின் கட்டணம் கடந்த 10-ந் தேதி முதல் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு வரும் 2026ம் ஆண்டு வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டணத்தின் படி  முதல் 100 யூனிட்களுக்கு எந்தவித கட்டணமும் இல்லை என்ற நிலை தொடரும். அதன்பின்னர் 200 யூனிட்டுகளுக்கு பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 27.50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல்  300 யூனிட் வரை பயன்படுத்தினால் மாதம் ஒன்றிற்கு 72.50 ரூபாய் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 400 யூனிட் வரை பயன்படுத்தோவருக்கு மாதம் ஒன்றுக்கு 147.50 ரூபாய் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

மின் பயன்பாடு கூடுதல் கட்டணம் (2 மாதங்களுக்கு):
200 யூனிட் 55 ரூபாய்
300 யூனிட் 145 ரூபாய்
400 யூனிட் 295 ரூபாய்
500 யூனிட் 310 ரூபாய்
600 யூனிட் 550 ரூபாய்
700 யூனிட் 595 ரூபாய்
800 யூனிட் 790 ரூபாய்
900 யூனிட் 1,130 ரூபாய்

இந்தக் கட்டண உயர்வு அனைத்தும் வரும் 2026-27 வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடில் கடைசியாக 2014ஆம் ஆண்டு மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து தற்போது மீண்டும் மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் மின்சார வாரியத்தின் கடன் பாக்கி எவ்வளவு?

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நிலுவை தொகை தொடர்பாக அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்த மாதம் பேசினார். அப்போது, “தமிழக மின்சார வாரியம் இந்த வருடம் ஏற்பட்ட தொகை மட்டுமல்லாது, கடந்த பல ஆண்டுகளாக நிலுவைத் தொகையும் சேர்த்து ஏறத்தாழ 17,343 கோடி அளவிற்கு தமிழ்நாடு மின்சார வாரியம் மின் உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டிய தொகை 48 மாதங்களாக பிரித்து வட்டியுடன் சேர்த்து கணக்கிடப்பட்டு, ஒரு மாதத்திற்கு ஏறத்தாழ 361 கோடி என்ற அளவில் 48 மாதங்களாக மின் உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை, கடந்த மாதம் வழங்க வேண்டிய தொகை 4ஆம் தேதியே வழங்கி முடிக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola