மத்திய அரசு மீன்வளம் பாதுகாப்பு, மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் பொருட்டு ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடி தடைக்காலத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. இதில் கிழக்குக் கடற்கரை பகுதிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரையிலான 61 நாட்கள் இந்த தடைக்காலம் அமலில் இருந்து வருகிறது. 


அந்த வகையில், இந்தாண்டும் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருந்தது. கடந்த ஜுன் 14 ம் தேதி பிறகு, மீன்பிடி தடைக்காலம் முடிந்து இன்று முதல் ஞாயிற்றுக் கிழமை என்பதால் சென்னை காசி மேட்டில் மீன் வாங்க பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். 


ஞாயிற்றுக் கிழமை என்பதால் மீன்களின் விலை சற்று அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, சென்னை காசி மேட்டில் மீன்களின் விலை என்ன என்பதை கீழே காணலாம். 



  • வஞ்சிரம் மீன் (கிலோ) - ரூ.1500

  • வவ்வால் மீன் (கிலோ) - ரூ.1000

  • சங்கரா மீன் (கிலோ) - ரூ. 500

  • பாறை மீன் (கிலோ) - ரூ. 350

  • நெத்திலி மீன் (கிலோ) - ரூ. 250

  • வெள்ளை ஊடான் (கிலோ) - ரூ. 150

  • காரப்பொடி (கிலோ) - ரூ. 100

  • இறால் (கிலோ) - ரூ. 600

  • நண்டு (கிலோ) - ரூ. 400


அதேபோல் 2 மாதங்களுக்கு பிறகு ப்ரஷான மீன்களை வாங்க மொத்த மீன் வியாபாரிகளும் சென்னை காசிமேட்டில் குவிந்து வருகின்றனர். பெரிய வகை மீன்களை தொடர்ந்து பொதுமக்கள், மத்தி மீன் உள்ளிட்ட சிறிய வகை மீன்களை வாங்கவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். 


தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதிகளான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 14 மாவட்டங்களில் இருந்து வந்த மீன் பிடித்தடைக்காலத்திற்கு பிறகு, 1000 க்கும் மேற்பட்ட விசை படகுகள் கடலில் பாய்ந்து மீன்களை அள்ளி வருகின்றனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண