சரிவர மூடப்படாத பள்ளம்



சென்னை: சென்னை தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்தூர், பார்வதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரேவதி (வயது 50). இவர் படப்பையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் வழக்கம் போல் பள்ளிக்குச் செல்வதற்காக தனது மகள் தீபிகா (வயது-21) உடன் இருசக்கர வாகனத்தில், பின்னால் அமர்ந்து மதனபுரம் அருகே சென்று கொண்டிருந்தார். ஏற்கனவே எரிவாயு குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டு சரிவர மூடப்படாததால் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது. 


பேருந்தில் சிக்கிய இருசக்கர வாகனம்


இந்தநிலையில் அந்தப் பகுதியை கடக்க முயற்சி செய்தபோது வேகத்தை கட்டுப்படுத்த பிரேக் பிடித்ததால் நிலை தடுமாறி கீழே விழுந்த ரேவதி மீது பக்கவாட்டில் சென்று கொண்டிருந்த தனியார் பள்ளி வாகனத்தின் பின் டயர் ஏறி இறங்கிதில் படுகாயம் அடைந்தார். உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக இருவரையும் அனுப்பி வைத்தனர். 


உடலை கைப்பற்றி விசாரணை


இதுகுறித்து தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு துறை  போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டபோது சிகிச்சை பெற்று வந்த ரேவதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து உடலை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும் வாகனத்தை ஓட்டிச் சென்ற அவரது மகள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


தலைக்கவசம் அணியவில்லை


இதுகுறித்து முதற்கட்ட விசாரணையில், இருவரும் தலைக்கவசம் அணியாமல் சென்றது தெரியவந்தது. மேலும் எரிவாயு குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தின் அருகில் கிடந்த மணல்கள் சரியாக அகற்றப்படாததால், வேகத்தை குறைக்கும் போது முன்பக்க டயர் ஸ்லீப் ஆகி கீழே விழுந்தது சிசிடிவியில் தெளிவாக பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மேலும், தாம்பரம் முடிச்சூர் சாலையில் இதுபோன்ற எரிவாயு குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் சரிவர மூடாமலும் மணல்கள் அகற்றப்படாமலும் இருப்பதால் அவ்வப்போது சிறு சிறு விபத்துக்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், தற்சமயம் உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது.


 


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண