பெருங்களத்தூரில் மது போதையில்  முதல் மாடியில் குதித்த இளைஞர் உயர் அழுத்த மின்சார கம்பிகளில் சிக்கி உயிரிழந்தார். தாம்பரத்தில் தீயணைப்பு வாகனம் இல்லாததால், மேடவாக்கத்தில் இருந்து காலதாமதமாக வந்த தீயணைப்பு வாகனத்தால் சற்று பரபரப்பு ஏற்பட்டது


தாம்பரம் (Tambaram News) : சென்னை தாம்பரம் மாந்தோப்பு பகுதியை சேர்ந்த இளைஞர் டேனியல்(23) வீட்டில் குடும்ப சண்டை காரணமாக பழைய பெருங்களத்தூர் காமராஜர் சாலையில் உள்ள நண்பன் மணிகண்டன் வீட்டிற்கு சென்றார். அங்கு முதல் மாடியில் இருந்த அவர்கள் மது அருந்தியுள்ளனர்.


 




இந்த நிலையில் டேனியல் தற்கொலை எண்ணத்துடன் முதல் மாடியில் இருந்து குதித்துள்ளார். அங்கு சென்ற உயர் மின் அழுத்த கம்பிகள் இடையே சிக்கி உயிருக்கு போராடினார்,


இதுகுறித்து தாம்பரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்த நிலையில் மின்சார துறையினர் மூலம்  உடனடியாக மின்சாரமும் நிறுத்தப்பட்டது. ஆனால் தாம்பரம் தீயணைப்பு நிலையத்தில் வாகனம் இல்லாததால் மேடவாக்கத்தில் இருந்து தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டது. அதன்பின்னர் தீயணைப்பு வீரர்கள் டேனியலை மீட்டு அந்த வானத்தின் மீதே சி.பி.ஆர் சிகிச்சை கொடுத்து உயிர்காக்க முயன்றனர். ஆனால் டேனியல் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார்.  தீயணைப்புக்கு தகவல் தெரிவித்து 2 மணி நேரம் கழித்தே வாகனம் வந்ததாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.




இது குறித்து பீர்க்கன்காரணை போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். மின்சார கம்பிகள் இடையே உடல் சிக்கி நீண்ட நேரம் கம்பியில் தொங்கியப்படி இளைஞர் காட்சியளித்தது  அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டடது.


இதுகுறித்து காவல்துறையினரிடம் விசாரித்த பொழுது, இளைஞர் டேனியல் மதுபோதையில் இருந்தது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தற்கொலை எண்ணத்துடன் தான் அவர் மேலிருந்து குதித்துள்ளார். தகவல் கிடைத்த அடுத்த நிமிடமே தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மின்சார ஒயரில் இளைஞர் உடல் சிக்கி இருந்தால் மின்சாரமும் நிறுத்தப்பட்டது. இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என தெரிவித்தார்.


 




Suicidal Trigger Warning..


வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)