சென்னையில் ரயில்வே பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பயணிகள் பாதுகாப்பையும், ரயில் இயக்க பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு, சென்னை சென்ட்ரல் – கூடூர் பிரிவில் பொன்னேரி யார்டு பகுதியில் செப்டம்பர் 7ஆம் தேதி இரவு 8 மணி முதல் செப்டம்பர் 8ஆம் தேதி காலை 4 மணி வரை (8 மணி நேரம்) லைன் பிளாக் மற்றும் பவர் பிளாக் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் இயங்கும் பல உள்ளூர் புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் 11 உள்ளூர் ரயில்கள் ரத்து
செப்டம்பர் 7ஆம் தேதி மொத்தம் 11 உள்ளூர் (EMU) ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதில் சென்னை பீச் – கும்மிடிப்பூண்டி, மூர் மார்க்கெட் காம்ப்ளெக்ஸ் – கும்மிடிப்பூண்டி, சுல்லுருபேட்டை – மூர் மார்க்கெட் காம்ப்ளெக்ஸ் உள்ளிட்ட வழித்தடங்களில் இயங்கும் ரயில்கள் அடங்கும்.
ரத்து செய்யப்பட்ட ரயில்கள்
-
42609 சென்னை பீச் – கும்மிடிப்பூண்டி (18:45 மணி)
-
42029 மூர் மார்க்கெட் – கும்மிடிப்பூண்டி (19:35 மணி)
-
42611 சென்னை பீச் – கும்மிடிப்பூண்டி (20:00 மணி)
-
42613 சென்னை பீச் – கும்மிடிப்பூண்டி (21:20 மணி)
-
42037 மூர் மார்க்கெட் – கும்மிடிப்பூண்டி (23:20 மணி)
-
42608 கும்மிடிப்பூண்டி – சென்னை பீச் (19:35 மணி)
-
42038 கும்மிடிப்பூண்டி – மூர் மார்க்கெட் (20:15 மணி)
-
42422 சுல்லுருபேட்டை – மூர் மார்க்கெட் (20:35 மணி)
-
42610 கும்மிடிப்பூண்டி – சென்னை பீச் (20:35 மணி)
-
42040 கும்மிடிப்பூண்டி – மூர் மார்க்கெட் (21:25 மணி)
-
42042 கும்மிடிப்பூண்டி – மூர் மார்க்கெட் (22:30 மணி)
சிறப்பு பயணிகள் ரயில்கள் இயக்கம்
இந்த ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கு பதிலாக செப்டம்பர் 7ஆம் தேதி சிறப்பு பயணிகள் ரயில்கள் இயக்கப்படும்.
-
சென்னை கடற்கரை – மீஞ்சூர் (18:45 மணி, 21:20 மணி)
-
மூர் மார்க்கெட் – மீஞ்சூர் (19:35 மணி)
-
மீஞ்சூர் - சென்னை கடற்கரை (20:04 மணி)
-
மீஞ்சூர் – மூர் மார்க்கெட் (20:44 மணி, 21:56 மணி)
-
சூல்லூர்பேட்டை - கும்மிடிப்பூண்டி (20:35 மணி)
பயணிகள் கவனத்திற்கு
சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி மற்றும் சுல்லுருபேட்டை வழித்தடத்தில் பயணிகள் தங்கள் பயணத்தை திட்டமிடுவதற்கு முன் இந்த மாற்றங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று ரயில்வே கேட்டுக் கொண்டுள்ளது.