சென்னையில் திடீரென இன்று பிற்பகல் முதல் கனமழை பெய்து வருகிறது. சுமார் 4 மணி நேரமாக கொட்டித்தீர்த்த இந்த கனமழையால் சென்னை முழுவதும் சாலைகளில் வெள்ளம் போல மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால், பணி முடிந்து வீடு திரும்புவோர், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இதன் காரணமாக, சென்னை நகரில் உள்ள சாலைகளில் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் மணிக்கணக்கில் போக்குவரத்து நெரிசலில் மக்கள் சிக்கித் தவித்து வருகின்றனர்.
பலரும் டுவிட்டரில் தாங்கள் சிக்கித் தவித்து வருவது குறித்து பதிவிட்டு வருகின்றனர்.
எக்மோரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் மழையின்போது வீசிய சூறைக்காற்றால் அங்கிருந்த டெண்ட்கள் எல்லாம் பறந்ததை கீழே காணலாம்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும் ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம் பேஸ்புக் பக்கத்தில் தொடர ட்விட்டர் பக்கத்தில் தொடர யூட்யூபில் வீடியோக்களை காண
ஒருவர், வாகனம் ஓட்டும்போது இந்த மழையில் ஒன்றுமே தெரியவில்லை என்று பதிவிட்டுள்ளார்.
சென்னையின் முக்கிய சாலையான அண்ணாசாலையில் கடுமையான போக்குவரத்து காரணமாக வாகனங்கள் தீபாவளி, பொங்கல் பண்டிகைகளில் இல்லாத அளவிற்கு கிலோ மீட்டர் தொலைவிற்கு அணிவகுத்து நிற்கின்றன.
இந்த கனமழையிலும், சென்னை மாநகர காவல்துறையினர் போக்குவரத்தை சீர்படுத்தும் பணியில் நனைந்துகொண்டெ செயல்படுவதை பாராட்டி ஒருவர் பதிவிட்டுள்ளார்.
சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் திடீரென குவிந்த வீடியோவை காணலாம்.
சென்னை தலைமைச் செயலகத்திற்குள் மழைநீர் புகுந்த வீடியோவை கீழே காணலாம்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்