தமிழகத்தில் நான்கு  மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிகக் கனமழை முதல் அதி கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதுசென்னையில் இன்று மதியம் திடீரென மழை பெய்யத் தொடங்கியது. திடீரென பெய்யத் தொடங்கிய இந்த மழை ஒரு அரைமணி நேரம் பெய்த பிறகு நின்றது. இதையடுத்து, மதியம் 2.30 மணியளவில் மழை பெய்யத் தொடங்கியது. சுமார் 6 மணிநேரத்தை கடந்து தற்போது வரை சென்னையில் மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 






அத்துடன் சாலையில் மழை நீர் தேங்கியுள்ளதால் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் செல்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் இன்று மெட்ரோ ரயில் சேவை 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக சென்னையில் மெட்ரோ ரயில் சேவை இரவு 11 மணி வரை இயக்கப்படும். ஆனால் கடும் மழை காரணமாக மக்கள் வீடுகளுக்கு சென்றடை உதவும் வகையில் கூடுதலாக ஒரு மணி நேரம் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


 






இதற்கிடையே சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக பல்வேறு சாலையில் நீண்ட வரிசையில் வாகனங்கள் நின்று கொண்டிருக்கின்றன. இது தொடர்பான படங்களை பலரும் தங்களுடைய சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். மேலும் சென்னையில் அடுத்த 5 மணி நேரத்திற்கு அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகளை தொடங்க சென்னை மாநாகராட்சி ஊழியர்கள் தயார் நிலை உள்ளதாக மாநாகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண