சென்னையில் மழை:


தமிழ்நாடு பகுதிகளின் மேல் நிலவும் வளிமணடல மேலடுக்கு சுழற்சி காரணமாக, சென்னை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இன்று காலை கடும் வெயில் இருந்த நிலையில், மதியத்திற்கு பின்பு, கருமேகங்கள் சென்னை மாவட்டத்தை சூழ்ந்தன. அதனை தொடர்ந்து தற்போது இடியுடன் கூடிய மழை பல்வேறு பகுதிகளில் பெய்தது. குறிப்பாக சூளைமேடு, வடபழனி, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.






இந்நிலையில் வானிலை மையம் தெரிவித்துள்ளதாவது, சென்னை மாவட்டத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடனும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக் கூடும் என தெரிவித்துள்ளது.






மாவட்டங்களில் கன மழை:


தமிழ்நாடு பகுதிகளின் மேல் நிலவும் வளிமணடல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 


நீலகரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கரூர், திருச்சி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், டெல்டா மாவட்டங்கள் ஆகிய  மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.






கூடுதல் தகவல்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்THUNDER STORM NOWCAST (2).pdf" rel="dofollow"> THUNDER STORM NOWCAST (2).pdf


Also read: கரூர் அருகே பெரிய ஆண்டாங்கோயில் தடுப்பணைக்கு வினாடிக்கு, 243 கன அடி தண்ணீர் மட்டுமே வந்தது. இதனால், அணைப்பகுதிகளில் பொதுமக்கள் மீன்பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.