வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு பெய்த கன மழையால் சென்னையில் தாழ்வான பகுதிகளில் முழங்கால் மற்றும் இடுப்பளவு மழைநீர் தேங்கியதால் தலைநகரம் தத்தளிக்கும் நகரமாக மாறியிருக்கிறது. வீடுகளிலும் நீர் புகுந்ததால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். 


கனமழை தொடர்ந்து நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் 2015ஆம் ஆண்டு சென்னைவாசிகள் கண்முன்னே வந்து பீதியை உருவாக்கியுள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் களத்தில் இறங்கி ஆய்வு செய்தாலும் அரசு தரப்பில் கொடுக்கப்பட்ட ஹெல்ப் லைன் எண்கள் சரிவர வேலை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது.




சூழல் இப்படி இருக்க இன்றும் சென்னையில் கனமழை காலை முதலே பெய்துவருகிறது. இடையில் சற்று நேரம் ஓய்ந்திருந்த மழை மீண்டும் ஆரம்பித்துள்ளதால் மக்கள் பணிக்கு செல்ல முடியாமல் தவித்துவருகின்றனர்.


சென்னையின் சில இடங்களில் இன்று ஓரளவு மழை குறைந்திருந்தாலும் கடந்த இரண்டு நாள்களாக பெய்த மழையின் காரணமாக சாலையில் தேங்கிய தண்ணீர் இன்னமும் வடியாமல் இருக்கிறது. குறிப்பாக சென்னையின் உட்புற சாலைகளில் நிலைமை இன்னும் மோசமாகவே உள்ளது. பொது மக்களால் வீடுகளை விட்டு வெளியில் வர முடியவில்லை.


 






ஒரு சில இடங்களில் மட்டும் தான் மழை நீரை வடிய செய்வதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. பெரும்பான்மையான பகுதிகளில் அந்தப் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. சில இடங்களில் மழை நீர் வடிகால்கள் மழை நீரை உள்வாங்க முடியவில்லை என்றும், அவை சரியாக பராமரிக்கப்படாததுதான் அதற்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது.




தேங்கிய மழைநீரை வடிய செய்வதற்கான பணியில் அரசு மெத்தனமாக செயல்படுவதாக தொடர் குற்றச்சாட்டுக்கள் எழுந்திருக்கின்றன. மேலும் அந்தப் பணியை உடனடியாக துரிதமாக மேற்கொண்டு மழை நீரை வடிய செய்ய வேண்டுமென்பதே மக்களின் குரலாக இருக்கிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண