Chennai Power Cut:  சென்னையில் இன்று மயிலாப்பூர், ஐடி காரிடர் மற்றும் பொன்னேரி ஆகிய பகுதிகளில் மின்பராமரிப்பு காரணமாக மின்தடை செய்யப்படுகிறது.


மின்சாரம் தடையின்றி விநியோகிப்பதை உறுதி செய்வதற்காக மாதந்தோறும் அந்தந்த பகுதிகளில் மின் உபகரணங்கள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இந்நிலையில், சென்னையில் இன்று மயிலாப்பூர், ஐடி காரிடர் மற்றும் பொன்னேரி ஆகிய பகுதிகளில் மின்பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது. 


மயிலாப்பூர்


மயிலாப்பூர்  பகுதிகளில் கீழ்கண்ட இடங்களில் மின்தடை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


29-வது டிடிகே சாலை, 42-வது டிடிகே சாலை ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 வரை இன்று மின்தடை செய்யப்படுகிறது.


ஐடி காரிடர்


மயிலாப்பூர்  பகுதிகளில் கீழ்கண்ட இடங்களில் மின்தடை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


சோழிங்கநல்லூர் காந்தி நகர், ஏரிக்கரை, உமாமகேஸ்வரி நகர், குளோபல் பள்ளி ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 வரை இன்று மின்தடை செய்யப்படுகிறது.


பொன்னேரி


மயிலாப்பூர்  பகுதிகளில் கீழ்கண்ட இடங்களில் மின்தடை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கண்டிகை தேர்வாய் கண்டிகை, கரடிபுதூர், ஜி.ஆர். கண்டிகை, சின்னப்புலியூர், பெரியபுலியூர், சிறுவாடா, என்.எம் கண்டிகை  ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 வரை இன்று மின்தடை செய்யப்படுகிறது.


மேற்கண்ட பகுதிகளில் இன்று மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்பட உள்ளது. மேற்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்பட உள்ளது. சில பகுதிகளில் மாலை 5 மணி வரை மின்தடை செய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் நேற்று முதல் விடாமல் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், சென்னையில் இன்று பொன்னேரி, ஐடி காரிடர், மயிலாப்பூர் பகுதிகளில் மின்தடை செய்யப்பட உள்ளதால் அந்த பகுதி மக்கள் மின்சார தொடர்பான பணிகளை விரைவாக முடித்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


வானிலை எச்சரிக்கை


இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், சென்னை, திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.




மேலும் படிக்க


Cyclone Mandous: அடுத்த 3 மணி நேரத்திற்கு 38 மாவட்டங்களில் மழை.. எந்தெந்த மாவட்டம் ? எங்கே கன மழை ?