Chennai Power Cut: சென்னையில், நாளை ஜனவரி 28ஆம் தேதி, எந்தெந்த இடங்களில் மின் தடை செய்யப்படும் என்பது குறித்து பார்ப்போம். சென்னையில் மின்சாரம் வழங்குவதில், எவ்வித தடையும் இருக்கக் கூடாது என , அரசானது அவ்வப்போது பல்வேறு இடங்களில் மின்பராமரிப்பு பணிகளை மேற்கொள்வது வழக்கம். இதனால், மின் கசிவு உள்ளிட்ட பிரச்னைகள் சரி செய்யப்படும்.
சென்னையில் நாளை மின்தடை: 28-01-2025
இந்நிலையில், சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு இடங்களில் மின் தடையானது செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதனால், சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையிலான கால அளவில் மின்சாரமானது சில பகுதிகளில் இருக்காது தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: TN Rain: மக்களே உசார்.! 3 நாட்களுக்கு கனமழை வெளுக்கப்போகுது..மாவட்டங்கள் லிஸ்ட் இதோ.!
மின்தடை செய்யப்படும் இடங்கள்:
சென்னை மேற்கு மின்தடை பகுதிகள்:
வைஷ்ணவி நகர், மணிகண்டபுரம், செந்தில் நகர், ஆவடி மார்க்கெட், கோவில்பதாகை, சிடிஎச் சாலை, எச்விஎஃப் சாலை, ஜாக் நகர், போலீஸ் குவார்ட்டர்ஸ், ஸ்ரீ நகர் காலனி, கவரப்பாளையம் மற்றும் திருமுல்லைவாயல் முழுவதும்.
சென்னை தெற்கு 2 மின் தடை பகுதிகள்:
பூமாலை, மப்பேடு, கலைஞர் நகர், முருகன் அவென்யூ, ரூபி வில்லா, ஸ்ரீ சாய் அவென்யூ, வெங்கம்பாக்கம் பிரதான சாலை, எஸ்பி அவென்யூ, அசோக் நகர், என்ஆர்கே நகர், எம்எம் வில்லா மற்றும் ஜிகேஎம் கல்லூரி.
ஐபிஎஸ் காலனி முழுவதும் ராமாபுரம் பகுதி, மணப்பாக்கம் பகுதி, முகலிவாக்கம், முழு கொளப்பாக்கம் பகுதி, வெங்கடேஸ்வரா நகர், பூதப்பேடு, ராமச்சநதிரா நகர் (கெருகம்பாக்கம்), ஜெய் பாலாஜி நகர் கான் நகர், எம்ஜிஆர் நகர்.
பராமரிப்பு பணி:
தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு மின்சார துறை சார்பில் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மாதம் தோறும் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணி மேற்கொள்வதற்காக ஒருநாள் மின் நிறுத்தம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை சென்னை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளன.
மின் தடை வழங்கப்படும் நாளில், பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். அந்தவகையில், சென்னையில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளாது.
இதனால், பொதுமக்கள், தங்களது முக்கிய பணிகளை இன்றே திட்டமிட்டு முடித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.