Chennai Power Shutdown (13.06.2025): மக்களுக்கு தடையின்றி மின்சாரம் தருவதை உறுதி செய்யும் வகையில் தமிழ்நாடு மின்சார வாரியம் மாதந்தோறும் இந்த மின் தடையை செய்து பராமரிப்பு பணிகள் செய்து சீரான மின் விநியோகத்திற்கு வழிவகுத்து வருகிறது. சென்னையில் மாத பராமரிப்பு பணி காரணமாக நகரின் சில இடங்களில் மாதம் ஒரு முறை அரை நாள் மின் தடை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில் நாளை மின்தடை: 13.06.2025
இந்நிலையில், இன்று(13.06.2025) சென்னையில் பல்வேறு இடங்களில் மின்பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு இடங்களில் மின் தடை செய்யப்படும் எனற அறிவிப்பை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
இதனால், பராமரிப்பு பணிகளுக்காக வெள்ளிக்கிழமை 13.06.2025 காலை 09.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை பின்வரும் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மின் தடை செய்யப்படும் பகுதிகள்:
கௌரிவாக்கம்
ஆதிநாத் நகர், பாலாஜி நகர், சுசீலா நகர், விஜயநகரம், வேளச்சேரி மெயின் ரோடு, ஜெயலட்சுமி நகர், விக்னராஜபுரம்
மேடவாக்கம்
பெல் நகர் 1 முதல் 5வது தெரு, பரசுராம் அவென்யூ, வடக்குப்பட்டு மெயின் ரோடு, பில்லாபோங் பள்ளி, வெள்ளம்மாள் பள்ளி, ஜேகே அவென்யூ, ஆர்எஸ் என்கிளேவ், ஆல்ஃபா பிளாட்ஸ், ஆல்ஃபா வில்லா, ரூபம் பிளாட்ஸ், யுனைடெட் காலனி, சாய்ராம் நகர்
செம்பாக்கம்
பதிவு அலுவலகம் சேலையூர், வெங்கட் ராமன் தெரு, மாருதி நகர் 2வது மெயின் ரோடு, வேளச்சேரி மெயின் ரோடு (மகா லட்சுமி நகர்), சுவாமி தெரு, ராமசாமி தெரு, மறைமலை அடிகள் தெரு, அவ்வையார் தெரு, சபை.
திருவான்மியூர்(நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை)
இந்திரா நகர் பகுதி, திருவான்மியூர் பெரியார் நகர் பகுதி, கிழக்கு & மேற்கு காமராஜ் நகர், எல்பி ரோட்டின் ஒரு பகுதி , திருவள்ளுர்சாலை , சாஸ்திரிநகர் பகுதி பகுதி, அவ்வை நகர், ராஜாஜி நகர்
பல்லாவரம் மேற்கு
இந்திரா காந்திரோடு, தண்டுமாரியம்மன் கோவில் தெரு, ஜிஎஸ்டி சாலை பம்மல் மெயின் ரோடு முதல் ஏ2பி ஹோட்டல், மாலிக் தெரு, நாகரத்தினம் தெரு, கண்ணபிரான்கோயில் தெரு & சென்னை சில்க் ஒலிம்பியா & அதுல்யா டவர்ஸ்.
சென்னையில் மின்தடை நேரம்?
இந்த பகுதிகளில் இன்றுப் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளதாக தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
மேலும் பராமரிப்பு பணிகள் பிற்பகல் 02.00 மணிக்க்கும் நிறைவு பெற்றால் மின் விநியோகம் வழங்கபப்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள், தங்களது முக்கிய பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டு முடித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.