சென்னையில், மின்சார வாரியத்தின் பராமரிப்பு பணிகளுக்காக, நாளை எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது என்பது குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம். பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில், அதாவது காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கீழ் கண்ட பகுதிகளில், ஜூலை 30-ம் தேதி, அதாவது வியாழக் கிழமை மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Continues below advertisement

தாம்பரம்

ஏஎல்எஸ் நகர், ரமணா நகர், ஆதம்பாக்கம் மெயின் ரோடு, வடக்கு, கிழக்கு மற்றும் மேற்கு மாட வீதிகள், மாணிக்கம் அவென்யூ, பத்மாவதி நகர், அகரம் மெயின் ரோடு, வேதாச்சலம் நகர், எஸ்ஆர் காலனி, ஐஏஎப் சாலை, ரிக்கி கார்டன், ஹரிணி அபார்ட்மென்ட், சுமேரு சிட்டி, ரங்கா நகர், சாரங்காசி நகர், திருவண்ணாமலை நகர், திரு. காமராஜர் நெடுஞ்சாலை, பேட்டை தெரு, கண்ணகி தெரு, பஞ்சாயத்து போர்டு ரோடு, சக்ரா அவென்யூ.

பல்லாவரம்

திருசூலம் பெரியார் நகர், அம்மன் நகர், அருள்மலை சாவடி, அன்னை அஞ்சுகம், சக்தி நகர் மற்றும் பல்லாவரம் கிழக்கு பகுதி மற்றும் திருசூலம், வெங்கட்ராமன் நகர், சிவகாமி நகர், முத்தமிழ் நகர், காயத்திரி நகர், கிருஷ்ணா நகர், புவனேஸ்வரி நகர், பாசியம் நகர், மாணிக்கம் நகர், பிபிஆர் நகர்.

Continues below advertisement

அடையாறு

பெசன்ட் நகர், ருக்மணி ரோடு, கடற்கரை ரோடு, அருண்டேல் கடற்கரை சாலை, 7-வது அவென்யூ, 30-வது குறுக்கு சாலை, எம்ஜிஆர் சாலை, டைகர் வரதாச்சாரி சாலை, காந்தி நகர், கிரசென்ட் அவென்யூ சாலை, கிரசென்ட் பார்க் 1-வது மற்றும் 2-வது சாலை, காந்தி நகர் 3-வது குறுக்குத் தெரு மற்றும் 4-வது பிரதான சாலை, சாஸ்திரி நகர் மாளவியா அவென்யூ, சுப்பு தெரு, எம்ஜி ரோடு, மருதீஸ்வரர் நகர், எல்பி ரோடு, கேனல் பேங்க் ரோடு, கேபி நகர் 1 முதல் 3-வது மெயின் சாலைகள், கேபி நகர் 2 மற்றும் 3-வது குறுக்கு தெரு, பிவி நகர் 1 மற்றும் 2-வது தெரு, அண்ணா அவென்யூ பகுதி, கோவிந்தராஜபுரம், சர்தார்பட்டேஸ் ரோடு, பக்தவத்சலம் 1-வது தெரு.

வேளச்சேரி

வேளச்சேரி மெயின் ரோடு, மேட்டூ தெரு, ஓரண்டி அம்மன் கோவில் தெரு, ஜெகன்நாதபுரம், ராம்ஸ் மற்றும் சீப்ரோஸ் அடுக்குமாடி குடியிருப்புகள்.

வியாசர்பாடி

எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை, பிவி காலனி, சாஸ்திரி நகர், இந்திரா நகர் விரிவாக்கம், வியாசர்பாடி தொழிற்பேட்டை, காந்தி நகர், ஸ்டீபன் சாலை, வியாசர் நகர், காந்தி நகர், புதுநகர், எம்பிஎம் தெரு, வியாசர்பாடி மார்கெட், சென்ட்ரல் குறுக்கு தெரு, ஏபிசி கல்யாணபுரம், சத்யம்மூர்-25வது தெரு கார்டன், பள்ளத் தெரு 1 முதல் 3-வது தெரு, உதய சூர்யன் நகர், எஸ்.ஏ காலனி மற்றும் சர்மா நகர்.

ஆவடி

பட்டாபிராம், சேக்காடு, அய்யப்பன் நகர், ஸ்ரீதேவி நகர், தந்துறை, கண்ணப்பாளையம், கோபாலபுரம், விஜிவி நகர் மற்றும் விஜிஎன் நகரம்.

மேற்கண்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் முடிந்த உடன், பிற்பகல் 2 மணிக்குள் மின் விநியோகம்  மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.