Chennai Power Shutdown: சென்னையில் நாளை மாத பராமரிப்பு பணி காரணமாக நகரின் சில இடங்களில் மின் தடை செய்யப்படுவது வழக்கம். மக்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்குவதை உறுதி செய்யும் தமிழ்நாடு மின்சார வாரியம் மாதந்தோறும் இந்த மின் தடையை செய்து பராமரிப்பு பணிகளை மேற்க்கொண்டு வருகிறது.
இதையும் படிங்க: Trump Fix Deadline for Hamas: சனிக்கிழமை மதியத்துக்குள்ள பிணைக் கைதிகள விடலைன்னா அவ்ளோதான்... ஹமாசுக்கு ட்ரம்ப் கெடு...
சென்னையில் நாளை மின்தடை: 12.02.2025
இந்நிலையில், நாளை(12.02.2025) சென்னையில் மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் மின்பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு இடங்களில் மின் தடை செய்யப்படும் எனற அறிவிப்பை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
இதனால், பராமரிப்பு பணிகளுக்காக புதன்கிழமை (12.02.2025) காலை 09.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை பின்வரும் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
பொன்னேரி: அழிஞ்சிவாக்கம், அத்திப்பேடு, இருளிப்பட்டு, ஜனபஞ்சத்திரம் கூட் ரோடு, பெரியபாளையம் ரோடு, ஜெகநாதபுரம் ரோடு, சாய்கிருபா நகர் விருந்தாவன் நகர், எம்.கே.கார்டன், ஸ்ரீ நகர், எஸ்.வி.பார்ம், மாலிவாக்கம், அமூர் ஜெகநாதபுரம் சத்திரம், குதிரைப்பள்ளம்.
தேனாம்பேட்டை: போயஸ் கார்டன், டி.வி.சாலை, ஜெயம்மாள் சாலை, இளங்கோ சாலை, போயஸ் சாலை பகுதிகள், ராஜகிருஷ்ணா சாலை, எல்டாம்ஸ் சாலை, பெரியார் சாலை, காமராஜர் சாலை, காமராஜர் தெரு, சீதம்மாள் காலனி பகுதிகள், கே.பி.தாசன் சாலை, பாரதியார் தெரு, பக்தவச்சலம் தெரு, ஜே.டி.கே.ஆர்.ரோடு, ஜே.டி.கே.ஆர்.ரோடு. பார்த்தசாரதி பேட்டை, பார்த்தசாரதி கார்டன், கேஆர் சாலை பகுதிகள், ஜார்ஜ் அவென்யூ, எஸ்எஸ்ஐ சாலை, எச்டி ராஜா தெரு, ஏஆர்கே காலனி, அண்ணாசாலை பகுதி, வீனஸ் காலனி, முர்ரேஸ் கேட் சாலை.
திருமுல்லைவாயல்: மோரை, மாதா கோயில், அண்ணாநகர், வீராபுரம், திருமலை நகர், மாகரல், கொம்மாகும்பேடு, தாமரை பாக்கம், கரணி, கரலப்பாக்கம், காவனூர், கேடிபி ரோடு, மேல் கொண்டியார், கடாவூர், வெள்ளச்சேரி, போத்தூர், பொக்கிஷம் பூமி நகர், கன்னட பாளையம், சிவன் கர்டன் பாளையம், ஆர்.ஜே. நகர், தாய் நகர், அலமதி, ஏபிசி காலனி, வெண்மணி நகர்.
கிழக்கு முகப்பேர்: திருவள்ளுவர் சாலை, மகிழச்சி காலனி, கார்டன் அவென்யூ, ஸ்பார்டன் அவென்யூ, அரசர் தெரு, வெள்ளாமல் பள்ளி சாலை, பென் பவுண்டேஷன் பொன்னியம்மன் நகர் வெள்ளாளர் தெரு, காமராஜ் தெரு, பிகேஎம் சாலை, பள்ளித் தெரு, இந்திரா காந்தி தெரு, இருளர் தெரு, பாடசாலை தெரு, எட்டீஸ்வரன் கோயில் தெரு, எட்டீஸ்வரன் கோயில் தெரு.
மேலும் பராமரிப்பு பணிகள் பிற்பகல் 02.00 மணிக்கு முன் முடிவடைந்தால் மின் விநியோகம் வழங்கப்ப்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள், தங்களது முக்கிய பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டு முடித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.