Chennai Power cut :
பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் சென்னையின் சில இடங்களில் மின் விநியோகம் நாளை துண்டிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மான கழகம் அறிவித்துள்ளது.
மின் சேவை வழங்கும் துறை மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின்சார சேவை நிறுத்துவது வழக்கமாகும்.
இந்நிலையில், நாளை (11.10.2022) எழும்பூர், அம்பத்தூர், போரூர், புழல், தாம்பரம், ஆவடி உள்ளிட்ட இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எழும்பூர்:
பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள கீழ்பாக்கம் காவல் துறை குடியிருப்பு, புள்ள ரெட்டி புரம், பூபதி நகர், தம்புசாமி தெரு, கீழ்பாக்கம் மருத்துவமனை கல்லூரி, நேரு பூங்கா உள்ளிட்டவைகளை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சார சேவை இருக்காது.
அம்பத்தூர்:
திருவேர்க்காடு மெத்தா மருத்துவமனை, பி.எச. சாலை, காவேரி நகர், கூட்டுறவு நகர், ஐய்யப்பந்தாங்கல் கிருஷ்ணா நகர், பரசு நாத் நகர், பாலாஜி நகர், ராஜாஸ் பூங்கா உள்ளிட்டவைகளை சுற்றியுள்ள பகுதிகள் மின்சார சேவை துண்டிக்கப்படும்.
போரூர்:
திருமுடிவாக்கம் மூன்றாவது பிரதான சாலை, திருமுடிவாக்கம் சிட்கோ, உள்ளிட்ட பகுதிகள் நாளை மின் விநியோகம் இருக்காது.
புழல்:
புனித அந்தோனியர் கோயில் தெரு, கவன்கரை, வண்டிமேடு, பஜனை கோயில் தெரு, ரெட் ஹில்ஸ் ஜி.என்.டி. ரோடு, பால கணேஷ் நகர், அன்னை இந்திரா காந்தி சாலை, புழல் மெட்ரோ வாட்டர், புழல் சிறை 1, 2, 3, மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
தாம்பரம்:
சித்தப்பாக்கம் முழுவதும், சொக்கநாதன் தெரு, ஷர்மா நகர், பாபு தெரு, கல்யாண சுந்தரம் தெரு, எஸ்.பி.பி. காலனி, சுதா அவென்யூ மற்றும் அதனை சுற்று வட்டார பகுதிகளில்
ஆவடி:
செந்தில் நகர், ரவேந்திர நகர், ஸ்ரீ நகர் காலனி, முல்லை குறிஞ்சி தெரு, சோழன் நகர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நாளை மின்சாரம் விநியோகம் தடை செய்யப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் மின் கட்டண விவரம்:
தமிழ்நாட்டில் 8 ஆண்டுகளுக்கு பிறகு மின் கட்டணம் கடந்த மாதம் 10-ந் தேதி முதல் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு வரும் 2026ம் ஆண்டு வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டணத்தின் படி முதல் 100 யூனிட்களுக்கு எந்தவித கட்டணமும் இல்லை என்ற நிலை தொடரும். அதன்பின்னர் 200 யூனிட்டுகளுக்கு பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 27.50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் 300 யூனிட் வரை பயன்படுத்தினால் மாதம் ஒன்றிற்கு 72.50 ரூபாய் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 400 யூனிட் வரை பயன்படுத்தோவருக்கு மாதம் ஒன்றுக்கு 147.50 ரூபாய் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மின் பயன்பாடு | கூடுதல் கட்டணம் (2 மாதங்களுக்கு): |
200 யூனிட் | 55 ரூபாய் |
300 யூனிட் | 145 ரூபாய் |
400 யூனிட் | 295 ரூபாய் |
500 யூனிட் | 310 ரூபாய் |
600 யூனிட் | 550 ரூபாய் |
700 யூனிட் | 595 ரூபாய் |
800 யூனிட் | 790 ரூபாய் |
900 யூனிட் | 1,130 ரூபாய் |
இந்தக் கட்டண உயர்வு அனைத்தும் வரும் 2026-27 வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடில் கடைசியாக 2014ஆம் ஆண்டு மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து தற்போது மீண்டும் மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க..
காஞ்சிபுரம்: செல்போன் வாங்கி தராத கணவர்? - மன உளைச்சலில் மனைவி தற்கொலை!