சென்னையில், பராமரிப்பு பணிகளுக்காக, நாளை(18.06.2026) எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது என்பது குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம். பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கீழ் கண்ட பகுதிகளில், ஜூன் 18-ம் தேதி, மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னையில், பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக, ஒவ்வொரு மாதமும் மின்வாரியத்தின் தரப்பில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகள் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பராமரிப்பு பணிகளின் போது, சம்பந்தப்பட்ட மின் பாதைகளைச் சேர்ந்த பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு செய்யப்படும். இது தொடர்பாக, அப்பகுதி மக்களுக்கு மின்சார வாரியம் தரப்பிலிருந்து முக்கூட்டியே தகவல் அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், நாளை கீழ்கண்ட பகுதிகளில் பிராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், அப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐயப்பன்தாங்கல்
- மவுண்ட் பூந்தமல்லி ரோடு
- பிள்ளையார் கோவில் தெரு
- முருகன் கோவில் தெரு
- ஜே.ஜே.நகர்
- அம்மன் நகர்
- பி.ஜி அவென்யூ
- இந்திரா நகர்
- ஜானகியம்மாள் நகர்
- சாய் நகர்
- விநாயகபுரம்
- சொர்ணபுரி நகர்
பல்லாவரம்
- நாகல்கேணி
- குரோம்பேட்டை
- திருநீர்மலை மெயின் ரோடு
- பஜனை கோயில் தெரு
- இரட்டை மலை சீனிவாசன் தெரு
- டி.வி.எஸ் லட்சுமணன் நகர்
- கோதண்டம் நகர்
- கல்யாணிபுரம்
- எம்.சி ராஜா தெரு
திருவேற்காடு
- பள்ளிக்குப்பம்
- சண்முகா நகர் மற்றும் இணைப்பு
- கூட்டுறவு நகர் கட்டம்-IV
- அன்னம்மாள் தெரு
- சவீதா கல்லூரி
- பி.எச்.ரோடு
மேற்கண்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் முடிந்த உடன், பிற்பகல் 2 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
