தீபாவளி பண்டிகைக்கான ஷாப்பிங்கில் மும்முரமாக உள்ள பொதுமக்களிடம் இருந்து, கொள்ளையடிக்க உள்ள 7,800 திருடர்களை நவீன தொழில் நுட்பத்தின் மூலம் முன்னதாகவே பிடிக்க சென்னை போலீசார் திட்டமிட்டுள்ளனர். 


இந்தாண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 4ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. கடந்தாண்டு கொரோனா தொற்றின் காரணமாகவும், அதனால் ஏற்பட்ட பொருளாதார பிரச்னைகளாலும் தீபாவளி பண்டிகையை சாதாரண மக்கள் சரியாக கொண்டாடவில்லை. தற்போது கொரோனா இரண்டாவது அலை படிப்படியாக குறைந்தும், தளர்வுகள் வழங்கப்பட்டும் உள்ளதால் இந்தாண்டு தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாட பொதுமக்கள் தயாராகி வருகின்றனர்.


தீபாவளி பண்டிகையை கொண்டாட முக்கியமானதாக புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்பு வகைகள் ஆகியவைகளே பிரதானமாக இருக்கும். இவைகளை எல்லாம் இருந்தாதான் அது தீபாவளி ஆகும். இதற்காக நடுத்தர, ஏழை மக்கள் சிறுக, சிறுக பணத்தை சேமித்து தீபாவளி பண்டிகை நெருங்கும் நேரத்தில் அதனை வாங்குவதற்கு தயாராவர்கள். 


அந்த வகையில், அடுத்த வாரம் வரவுள்ள தீபாவளி பண்டிகையை கொண்டாட மக்கள் கடந்த வாரத்தில் இருந்தே ஷாப்பிங் செய்ய தொடங்கினாலும், நேற்று அதிகளவில் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மக்கள் பொருட்களை வாங்கிச்சென்றார்கள். சென்னையில் தி.நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை, குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கூட்டம் அலைமோதியது. அடுத்தவாரம் ஞாயிற்றுக்கிழமை இன்னும் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




கொரோனாவால் பொது இடங்களில் மக்களின் நடமாட்டம் சில மாதங்களாக குறைந்திருந்தது. இதனால், பிக்பாக்கெட், செயின் பறிப்புகளில் ஈடுபடும் திருடர்கள் ஏமாற்றத்தில் இருந்தனர். தற்போது, பண்டிகை காலம் என்பதால் மக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில் அவர்களிடம் கைவரிசை காட்ட திருடர்கள் தயார் நிலையில் உள்ளனர். அவர்களை கைது செய்யவும், குற்றங்களை தடுக்கவும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ரு சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். 


இதுகுறித்து காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் கூறுகையில், “சென்னையில் தீபாவளி பண்டிகை பாதுகாப்பு பணியில் 6000 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தி.நகர், புரசைவாக்கம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பிக்பாக்கெட், செயின் பறிப்பு உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. face detection software என்ற செல்போன் செயலியின் வாயிலாக 7,800 குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த செயலியை பயன்படுத்தி செல்போன் மூலம் சந்தேகப்படும் நபர்களை படம் எடுத்தால் அவர்கள் மீது வழக்கு உள்ளதாக பழைய குற்றவாளிகளா என்பதை காட்டிக்கொடுத்து விடும். ட்ரோன், பைனாகுலர், சிசிடிவி என நவீன சாதனங்களையும் கண்காணிப்பு பணிக்கு பயன்படுத்தி வருகிறோம்” என்று கூறினார்.


மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...


 


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடிபில் வீடியோக்களை காண