சென்னை புறநகர் பகுதியில் இன்று உள்ள முக்கிய சாலையான சென்னை வெளிவந்த சாலைகள் அமைந்துள்ளது ( ORR - Outer Ring Road ). சென்னை அவுட்டர் ரிங் ரோடு போக்குவரத்து நெரிசலில் இருந்து, கனரக வாகனங்கள் செல்ல முக்கிய சாலையாக உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் இருந்து, மீஞ்சூர் வரை இந்த சாலை செல்கிறது. பொதுமக்கள் சென்னை புறநகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் செல்வதற்கு, இந்த சாலை மிக முக்கிய சாலையாக இருந்து வருகிறது ‌


செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் சுமார் 62 கிலோமீட்டர் தூரத்திற்கு 4 வழிச்சாலையாக இந்த சாலை இருந்து வருகிறது. சென்னை வெளிவட்ட சாலையில், 100 கிராமங்கள், 13 முக்கிய ஜங்ஷன்கள், 58 சுரங்க வழித்தடங்கள், நான்கு சுங்கச்சாவடிகள் ஆகியவை இந்த சாலையில் உள்ளன. சென்னை புறநகரில் உள்ள முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளையும் இந்த சாலை இணைக்கிறது. இதன் மூலம் மீஞ்சூர் துறைமுகத்திற்கு இந்த சாலை வழியாக ஏராளமான கனரக வாகனங்கள் தினம்தோறும் சென்று கொண்டிருக்கின்றன.


மாஸ்டர் பிளான் கையில் எடுத்த அரசு


சென்னையின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்த சாலை மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது. இந்த சாலை முக்கிய 4 இடங்களை இணைக்கிறது‌. வண்டலூர், பூந்தமல்லி, செங்குன்றம் மற்றும் மீஞ்சூர் ஆகியவை முக்கிய இடங்களாக இருக்கின்றன. எனவே இந்த நான்கு இடங்களை மையமாக வைத்து, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழும்பம் முக்கிய திட்டத்தை கையில் எடுத்துள்ளது. 


இந்த பகுதிகளில் புதிய குடியிருப்பு வசதிகள், புதிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலை மற்றும் தனியார் சேமிப்பு கிடக்குகள், உயர்தர ஓட்டல்கள், நகர்ப்புற சிறு வனப்பகுதிகள் உள்ளிட்டவற்றை அமைத்து பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் வகையில் மாற்றி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 


தொழில் நகரமாக உருவெடுக்கும் பூந்தமல்லி 


குறிப்பாக பூந்தமல்லி தொழிற்சாலை நிறைந்த பகுதியாக வேகமாக வளர்ந்து வருகிறது. பூந்தமல்லியை மையப்படுத்தி சென்னை - பெங்களூர் எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கும் பணியும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. பூந்தமல்லி வரை மெட்ரோ வழித்தடம் அமைக்கும் பணியும் நடைபெற உள்ளது. 


அதிகளவு தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி, புதிதாக திட்டமிடப்பட்டுள்ள திருமழிசை நகருக்கு அருகில் அமைந்துள்ளது. மேலும் தேவையான சாலை வசதிகள் ஆகியவை விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளதால் பூந்தமல்லி தொழில் உருவெடுக்கும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். பூந்தமல்லி பகுதியில் தொடர்ந்து தொழிற்சாலைகளும் தொழில் நிறுவனங்களும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.


வளர்ச்சியை நோக்கி வண்டலூர் 


ஏற்கனவே வண்டலூர் பகுதியில் கல்லூரிகள், ஐடி நிறுவனங்கள் மற்றும் ஐடி ஊழியர்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புகள் என வளர்ச்சியை நோக்கி பயணித்து வருகிறது. காஸ்மோபாலிடன் ஹப்பாக மாற்ற திட்டமிட்டுள்ளனர்.


மீஞ்சூர் மற்றும் செங்குன்றம் திட்டம் என்ன ?


மீஞ்சூர் பகுதியில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் மற்றும் ஐடி நிறுவனங்கள் அமைப்பதற்கு சரியான இடமாக உள்ளது. மேலும் மல்டி மாடல் ஹப், துறைமுகம் சார்ந்த வளர்ச்சி திட்டங்கள், உள்ளிட்டவற்றை கொண்டு வர முடிவு செய்துள்ளனர்.


செங்குன்றத்தை பொறுத்தவரை சூழலியல் மண்டலமாக மாற்ற திட்டங்கள் உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதாவது, நகர்ப்புற காடுகள், பசுமையான பரப்புகள், நீர்நிலைகள் சார்ந்த மேம்பாட்டு வசதிகள் உள்ளிட்டவற்றை கொண்டு வரவுள்ளனர்.


மாஸ்டர் தயாரிப்பு திட்டம் 


மேலே கூறிய சாத்தியக்கூறுகளின் அடிப்படையில் மாஸ்டர் பிளாண்ட் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மாஸ்டர் பிளான் தயாரிப்பதற்காக ஒப்பந்தம் விடப்பட்டு அதற்கான பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. சென்னை வெளிவட்டச் சாலைக்கான மாஸ்டர் பிளான் டிசம்பர் இறுதி அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நிறைவடையும்.


மாஸ்டர் பிளான் திட்டத்தின் அடிப்படையில், Pooling Area Development Scheme (LAPDS) மூலம் தேவையான சாத்திய கூறுகளை கண்டறிந்து அதன் மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது.