சென்னை விருகம்பாக்கம் பெரிய கிராமம் பச்சையம்மன் கோயில் தெரு பகுதியில் உள்ள சூட்டிங் செட் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அசோக் நகர், கே.கே.நகர், விருகம்பாக்கம் உள்ளிட்ட தீயணைப்பு துறை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.


கொழுந்து விட்டு எரியும் தீயால் அப்பகுதியில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க போராடி வரும் தீயணைப்பு வீரர்கள் தங்கள் வீடுகளுக்கு தீ பரவாமல் இருக்க வாலிகளில் நீரை இறைத்து பொதுமக்கள் ஊற்றினர்.


சூட்டிங் எடுக்க பயன்படும் பலகைகள், கட் அவுட்டுகள், பைபர் பொம்மைகள் உள்ளிட்டவை குடோனில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அதில் தீ பற்றி மள மளவென எரிந்துள்ளது. சுமார் 20-க்கும் மேற்பட்ட தீ அணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக இந்த பயங்கர தீ விபத்தானது எரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் இதனால் அந்த பகுதியில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. தீ விபத்து காரணமாக அப்பகுதியில் ஏராளமான மக்கள் கூடியதால் பெரும் பரபரப்பானது ஏற்பட்டுள்ளது. தீ விபத்து நடந்த சூட்டிங் செட் அருகே ஐ.ஏ.எஸ்,  ஐ.பி.எஸ் அதிகாரிகள் வசிக்கக்கூடிய அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் இந்த தீ விபத்து எவ்வாறு பரவியது மின் கசிவு காரணமா அல்லது வேறு ஏதேனும் நாச வேலையா? என்பது குறித்து விருகம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து முதற்கட்ட விசாரணையில் இறங்கி உள்ளனர்.


மேலும் இதனுள் வைத்திருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் முற்றிலும் எரிந்து நாசமாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த குடோன் இன்று பூட்டி இருந்த நிலையில் இந்த தீ விபத்தானது ஏற்பட்டு உள்ளது.


தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் 1 மணி நேரத்திற்கு மேலாக தீயை அனைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.