வெறும் காலில் நடந்து வந்த மூதாட்டியின் நிலை அறிந்து காலணி வாங்கி கொடுத்த போக்குவரத்து தலைமை காவலரை நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார் தாம்பரம் காவல்துறை ஆணையர் ரவி. சென்னை சோழிங்கநல்லூர் சந்திப்பில் கடந்த 28 ஆம் தேதி பணியில் இருந்த போக்குவரத்து தலைமை காவலர் ஜான்சன் புருஸ்லீ என்பவர் அவ்வழியே கடும் வெயிலில் நடந்து வந்த வயதான மூதாட்டியை பார்த்துள்ளார். மூதாட்டியும் வெயிலின் தாக்கத்தினால் போக்குவரத்து போலிஸார் பணியில் ஈடுபட்டிருந்த இடத்தில் சிறிது நேரம் இளைப்பாற அமர்ந்துள்ளார். போக்குவரத்து போலிஸார் மூதாட்டியை பார்த்ததும் கையில் இருந்த 20 ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார்.



பேச்சு கொடுத்துக் கொண்டிருந்த மூதாட்டி வெயில் அதிகமாக உள்ளதால் கால் சுடுவதாக கூறியுள்ளார். இந்த பேச்சைக் கேட்ட போக்குவரத்து தலைமை காவலர் சிறிது நேரத்தில் ஒருவரை அனுப்பி காலணி வாங்கி வந்து மூதாட்டிக்கு அணிவித்து அனுப்பி வைத்தார். மூதாட்டியோ இரு கைகூப்பி வணங்கி சென்றார். எந்த உதவி வேண்டுமானாலும் தயங்காமல் கேளுங்கள் இங்குள்ள இரண்டு சிக்னலில் தான் இருப்பேன் என மூதாட்டியிடம் எனவும் கூறியுள்ளார்.




இந்த செய்தியறிந்த தாம்பரம் காவல் ஆணையர் ரவி போக்குவரத்து தலைமை காவலரை நேரில் அழைத்து சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டினார். கடும் வெயிலில் செருப்பு இல்லாமல் தவித்த மூதாட்டிக்கு காவலர் செருப்பு வாங்கி அதை மூதாட்டிக்கு மாட்டி விட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் சமூக வலைதளவாசிகள் காவலருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். இதே போல அனைத்து காவலர்களும் மற்றும் காவல்துறை உயரதிகாரிகளும் பொது மக்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என கருத்து தெரிவித்து வருகின்றனர். தற்பொழுது இந்த வீடியோ தான் சமூக வலைத்தளத்தில் மிக வேகமாக சமூக வலைதள வாசிகளால் பகிரப்பட்டு வருகிறது


மேலும் படிக்க:ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் திரும்பி பார்க்க வைத்த அல்லூரி சீதாராமராஜூ - யார் இவர்?


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண