இந்தியாவில் டெல்லி மெட்ரோவின் வளர்ச்சி அனைவரையும் வியக்க வைக்கும் ஒன்று. தற்போது டெல்லி மெட்ரோவிற்கு போட்டியாக சென்னை மெட்ரோவும் வேகமாக வளர்ந்து வருகிறது. வாடிக்கையாளர்கள் பலரை சென்னை மெட்ரோ தற்போது அதிகமாக ஈர்க்க தொடங்கியுள்ளது. இதன்காரணமாக சென்னை மெட்ரோவில் அடிக்கடி பயணிகளுக்கு ஏற்ப சில மாற்றங்களை செய்து வருகிற்து. 


இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, “சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் பொதுமக்கள் மற்றும் மெட்ரோ இரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு நாளை (17.03.2022) முதல் அனைத்து நாட்களிலும் திங்கள்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை காலை 05:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.


வார நாட்களில் (திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை) மெட்ரோ இரயில் சேவை:


மெட்ரோ இரயில் சேவைகள் வார நாட்களில் (திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை) காலை 5.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை இயக்கப்படும் மெட்ரோ இரயில் சேவைகள் வழக்கம் போல் நெரிசல்மிகு நேரங்களில் காலை 08.00 மணி முதல் 11.00 மணி வரையிலும், மாலை 05.00 மணி முதல் இரவு 08.00 மணி வரையிலும் 5 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும். இரவு 10:00 மணி முதல் 11:00 மணி வரை 15 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.


ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் மெட்ரோ இரயில் சேவை:


மெட்ரோ இரயில் சேவைகள் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் காலை 5:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை 10 நிமிட இடைவெளியிலும், இரவு 10:00 மணி முதல் 11:00 மணி வரை 15 நிமிட இடைவெளியிலும் இயக்கப்படும் ” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண