சென்னை மெட்ரோ ரயில் சேவை 


சென்னை போன்ற நகரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வரும் நிலையில், பொது மக்கள் சாலை வழியான பயணத்திற்கு மாற்றாக மெட்டோ ரயிலில் பயணிப்பதை தேர்வு செய்கின்றனர்.  தற்போது சென்னையில் மெட்ரோ ரயில் சேவையானது விமான நிலையம்-விம்கோ நகர் வரையும், பரங்கிமலை-சென்ட்ரல் வரையும் இயக்கப்படுகிறது.


மெட்ரோ ரயில்கள் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படுகிறது. அலுவலக நேரங்களில் காலை 8 மணி முதல் பகல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 5 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும், சாதாரண நேரங்களில் 10 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும் இயக்கப்படுகிறது.


புதிய வசதி


இந்நிலையில், பயணிகள் டிக்கெட் எடுக்கும் வசதியை எளிமையாக்க ஏதுவாக புதிய வசதியை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிமுகப்படுத்தியது.  ஏற்கனவே பயணிகளின் வசதிக்காக நேரடி பயணச் சீட்டை பெற்றுக் கொள்ளும் முறை, பயண அட்டை, க்யூ ஆர் கோடு மூலம் பணம் செலுத்தி பயணிக்கும் முறை ஆகியவைகள் அறிமுகம் செய்யப்பட்டன.


அதனை தொர்ந்து தற்போது, மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிக்காக வாட்ஸ்-அப் மூலம் டிக்கெட் எடுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், இன்று முதல்  வாட்ஸ் அப் மூலம் டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


எப்படி டிக்கெட் பெறுவது?



  • சென்னை மெட்ரோ நிறுவனத்தின் பொதுவான கைப்பேசி எண் பயணிகளுக்கு வழங்கப்படும். இந்த எண்ணிற்கு வாட்ஸ்-அப் மூலம் (Hi) ஹாய் என்று அனுப்ப வேண்டும்.

  • பின்னர், சார்ட் பாட் என்ற தகவல் வரும்.

  • அதில் டிக்கெட் எடுப்பது தொடர்பான தகவல்கள் இடம் பெற்றிருக்கும். பயணியின் பெயர், புறப்படும் மெட்ரோ இரயில் நிலையம், சேரும் ரயில் நிலையம் ஆகியவற்றை பதிவுசெய்து, வாட்ஸ் அப், மூலமோ அல்லது ஜி-பே மூலமாகவோ பணம் செலுத்தினால் போதும்.

  • பயண டிக்கெட் வாட்ஸ்-அப் எண்ணிற்கு வந்துவிடும். 

  • இந்த டிக்கெட்டை ரயில் நிலைய நுழைவு வாயிலில் உள்ள க்யூ-ஆர் கோடு ஸ்கேனரில் காண்பிப்பதன் மூலம் மெட்ரோ ரயில் பயணத்தை மேற்கொள்ள முடியும். 

  • பயணம் முடிந்து, சென்று சேர வேண்டிய இடம் வந்ததும், அங்குள்ள மெசினில் க்யூ-ஆர் கோர் ஸ்கேனரில் டிக்கெட்டை காண்பித்டால் வெளியே செல்ல முடியும்.


மெட்ரோ ரயிலில் மக்கள் அதிகம் பயணிக்கும் நேரங்களில் டிக்கெட் எடுக்க நீண்ட வரிசையில் காத்திருப்பதை தடுக்க வாட்ஸ் ஆப் மூலம் டிக்கெட் பெறும் வசதி இன்று முதல் அறிமுகமாகிறது.




மேலும் படிக்க


Chennai Temperature: ஆறு ஆண்டுகளில் இல்லாத வெயில்.. சென்னையில் நேற்று 109 டிகிரி பாரன்ஹீட் வெப்பம்..! வாடும் மக்கள்..!