சென்னை மெட்ரோ ரயிலில் 2023-ம் ஆண்டில் மட்டும் 9.11 கோடி பேர் பயணம் மேற்கொண்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. 


இது தொடர்பாக சென்னை மெட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், “ சென்னையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டு இதுவரை இல்லாத அளவிற்கு க்டந்த 2023-ம் ஆண்டில் 9.11 கோடி பேர் பயணம் செய்துள்ளனர். கடந்த 2022-ம் ஆண்டில் 6,09,8,7,765 கோடி பேர் பயணித்துள்ளார்கள். 2022-ம் ஆண்டை விட 2023-ம் ஆண்டில் 3.01 கோடி பேர் அதிகமாக பயணித்துள்ளார்கள்.” என்று தெரிவித்துள்ளது. 


தினமும் 3 லட்சம் பேர் பயணம்


சென்னை மெட்ரோ இரயிலில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 3 லட்சம் பேர் பயணிக்கின்றனர். சென்னை மெட்ரோ இரயில் சேவை தொடங்கப்பட்ட எட்டு ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவிற்கு 2023-ம் ஆண்டில் மட்டும் 9.11 கோடி பேர் மெட்ரோ இரயிலில் பயணித்துள்ளார்கள் கடந்த 2022-ம் ஆண்டில் 6 கோடி09 லட்சத்துக்கு 87 ஆயிரத்துக்கு 765 கோடி பேர் பயணித்துள்ளார்கள். 2022-ம் ஆண்டை விட 2023-ம் ஆண்டில் 3.01 கோடி பேர் அதிகமாக பயணித்துள்ளார்கள் என்று சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.


2015 முதல் 2018 வரை 2 கோடியே 80 லட்சத்து 52 ஆயிரத்து 357 பயணிகள் சென்னை மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர். அதேபோல், 2019-ம் ஆண்டில் 3,28,13,628 கோடி பயணிகளும், 2020-ம் ஆண்டில் 1 கோடியே18 லட்சத்து 56 ஆயிரத்து 982 பயணிகளும், 2021-ம் ஆண்டில் 2 கோடியே 53 லட்சத்து 03 ஆயிரத்து 383 பயணிகளும் 2022-ம் ஆண்டில் 6 கோடியே 09 லட்சத்து 87 ஆயிரத்து 765 கோடி பயணிகளும்,  கடந்த 2023-ம் ஆண்டில் 9 கோடியே11 லட்சத்து 02 ஆயிரத்து 957 கோடி பயணிகளும் சென்னை மெட்ரோ இரயில்களில் பயணித்துள்ளார்கள்.


2015-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை 25,01,17,072 கோடி பயணிகள் சென்னை மெட்ரோ இரயில்களில் பயணித்துள்ளார்கள்.கடந்த 2023 நவம்பர் மாதத்தில் 80 லட்சத்து 01,210 பயணித்துள்ளனர். அதிகபட்சமாக நவம்பர் 10-ம் தேடி 3,35,677 பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொண்டுள்ளதாக நிர்வாகம் சார்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


டிக்கெட் சலுகை


சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் க்யுஆர் குறியீடு (OR Code) பயணச்சீட்டு, பயண அட்டைகள் (Travel Card), வாட்ஸ்அப் டிக்கெட், Paytm App மற்றும் PhonePe போன்ற அனைத்து வகையாக பயணச்சீட்டுகளுக்கும் 20% கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் டிக்கெட் (+91- 83000 86000 ) மூலமாக மற்றும் Paytm App மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம்.


மெட்ரோ ரயில்கள் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படுகிறது. அலுவலக நேரங்களில் காலை 8 மணி முதல் பகல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 'Peak Hours' 5 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும், சாதாரண நேரங்களில் 7 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும் இயக்கப்படுகிறது.


ஏற்கனவே இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயங்கி வரும் நிலையில், மாதவரம்-சிறுசேரி, பூந்தமல்லி-கலங்கரை விளக்கம், மாதவரம்-சோழிங்கநல்லூர் வழித்தடங்களில் மெட்ரோ பயணிகள் நடந்து வருகிறது. சென்னை மாநகரம் முழுவதும் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பயணிகள் நிறைவடைந்தால் மெட்ரோ இரயிலை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுகிறது.


7 நிமிட இடைவெளியில் ரயில் சேவை


அதிகரித்து வரும் மெட்ரோ இரயில் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு மற்றும் அவர்களின் காத்திருப்பு நேரத்தை குறைப்பதற்காகவும் இரண்டு வழித்தடங்களிலும் நெரிசல் மிகு நேரங்கள் இல்லாது மற்ற நேரங்களில் 9 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ இரயில் சேவை கடந்த மாதம் நவம்பர் மாதம்  முதல் 7 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னையில் கடந்த சில நாட்களாக பெரும் மழை பெய்து வருது. மக்களின் வசதிக்கு ஏற்ப நெரிசல்மிகு நேரங்களில் 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்று எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.