சென்னை மெட்ரோ இரயில் லிமிடெட் (Chennai Metro Rail Limited) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது  contract/deputation அடிப்படையிலானது என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பணி விவரம்:

DGM / JGM / AGM(Finance & Accounts)

AM / DM / Manager(Finance & Accounts)

AM / DM / Manager(Planning & BusinessDevelopment)

DGM - Deputy General Manager  JGM - Joint General Manager AGM - Assistant General

நிதி துறையில் துணை பொது மேலாளார், இணை பொது மேலாளார், உதவி மேலாளர் ஆகிய பணியிடங்கள் இந்த அறிவிப்பின் மூலம் நிரப்பப்பட உள்ளது. 

கல்வி மற்றும் பிற தகுதிகள்:

  • இந்தப் பணிகளுக்கு பட்டய கணக்கர் (Chartered Accountant/ Cost Accountant)படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • எம்.பி.ஏ. ஃபினான்ஸ் படித்தவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
  • MIS, Audit, Taxation (direct & indirect) and Indian Accounting Standards (IND-AS) உள்ளிட்டவைகள் குறித்து தெரிந்திருக்க வேண்டும். 

பணி அனுபவம் 

இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் ஆறு ஆண்டுகளில் இருந்து 17 ஆண்டுகள் வரை பணி அனுபவம் இருக்க வேண்டும்.

பணி காலம்:

இந்தப் பணி ஒப்பந்தம் அடிப்படையில் 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுள் வரை பணி காலம் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஊதிய விவரம்:

இந்தப் பணிகளுக்கு மாத ஊதியமாக வழங்கப்படும் தொகையின் விவரம்

  • DGM / JGM / AGM -(Finance & Accounts) - ரூ.90,000/- -ரூ. 1,50,000/
  • AM / DM / Manager (Finance & Accounts) - ரூ.60,000/- -ரூ. 80,000/-
  • AM / DM / Manager (Planning & Business Development) - ரூ.60,000/- -ரூ. 80,000/-

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்காணல் மற்றும் மெடிக்கல் டெஸ்ட் மூலம் இதற்கு தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்ப கட்டணம்:

இதற்கு பட்டியலின/ பழங்குடியின பிரிவினர் ரூ.50 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். ஏனைய பிரிவினர் ரூ.300 கட்டணமாக செலுத்த வேண்டும். 

விண்ணப்பிப்பது எப்படி?

https://careers.chennaimetrorail.org/ - என்ற சென்னை மெட்ரோ இரயில் லிமிடெட்-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிக்க கடைசி தேதி - 17.05.2023

இது தொடர்பான கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள https://chennaimetrorail.org/wp-content/uploads/2015/11/EMP-NO-CMRL-HR-CONDEP-05-2023-12-04-2023-1600.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.