Chennai Metro : மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகன நிறுத்துவதற்கு மெட்ரோ பயண அட்டை இருந்தால் மட்டுமே ஏற்றுகொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பானது ஏப்ரல் 19ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மெட்ரோ ரயில் சேவை 


சென்னை மக்களின் மிகப்பெரிய போக்குவரத்து பயன்பாட்டு சாதனமாக மெட்ரோ ரயில் சேவை இயங்கி வருகிறது. இதில் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகின்றனர். உள்ளூர் மக்கள் தொடங்கி வெளியூர், வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என நாளுக்கு நாள் மெட்ரோ ரயிலை பயன்படுத்துவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 


தற்போது  சென்னையில் மெட்ரோ ரயில் சேவையானது விமான நிலையம்-விம்கோ நகர் வரையும், பரங்கிமலை-சென்ட்ரல் வரையும் இயக்கப்படுகிறது.  மற்ற நேரங்களை விட  காலை மற்றும் மாலை நேரங்களில்  காலை மற்றும் மாலை நேரங்களில் பொதுமக்கள்  மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்துகின்றனர்.


பார்க்கிங் வசதி:


இந்நிலையில், மெட்ரோ ரயில் நிர்வாகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "பணமில்லா பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் வருகின்ற ஏப்ரல் 19, 2023 முதல், அனைத்து மெட்ரோ இரயில் நிலையங்களில் உள்ள வாகன நிறுத்துமிடங்களில் பயணிகள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு பணம் செலுத்துவதற்கு பதிலாக மெட்ரோ இரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. பயண அட்டை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.


இந்த நடவடிக்கையானது மிகவும் திறமையான, வசதியான மற்றும் பாதுகாப்பான கட்டண முறைக்காகவும், அத்துடன் பணப் புழக்கத்தைக் குறைக்க வேண்டிய தேவைக்காகவும் எடுக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி பயணிகள் வாகன நிறுத்துமிடங்களில் இருந்து வேகமாக நுழைவது மற்றும் வெளியேறுவது. பரிவர்த்தனைகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் பணமில்லா பரிவர்த்தனைகளின் வசதி உள்ளிட்ட பல நன்மைகளை வழங்கும்.


மெட்ரோ பயண அட்டை:


பயணிகள் மெட்ரோ இரயில் பயண அட்டையை அனைத்து மெட்ரோ இரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுண்டர்களிலும், மெட்ரோ இரயில் நிலைய வாகன நிறுத்துமிடத்திலும் பெற்றுக்கொள்ளாலம். மெட்ரோ இரயில் பயணிகள் பயண அட்டையை மெட்ரோ இரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் விற்பனை செய்யும் இடத்தில் மற்றும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இணையதளத்திலும் மறுஊட்டம் (TopUP) செய்துகொள்ளலாம். வாகன நிறுத்துமிடத்திற்கான அணுகல் பயண அட்டைகளுடன் மட்டுமே கிடைக்கும்.


வருகின்ற ஏப்ரல் 19. 2023 முதல், அனைத்து மெட்ரோ இரயில் நிலையங்களில் உள்ள வாகன நிறுத்துமிடங்களில் பயணிகள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு பயண அட்டைகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்பதால் அனைத்துப் பயணிகளும் மெட்ரோ இரயில் பயண அட்டைகளை விரைவாகப் பெறுமாறு” சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.




மேலும் படிக்க


Online Rummy: இந்த தடவ மிஸ் ஆகாது! ஆனலைன் சூதாட்ட தடை மசோதா.. இன்று மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைப்பு?


Twitter blue tick: ப்ளூ டிக்கிற்கு காசு கட்டிட்டீங்களா? - சலுகைக்கு நாள் குறித்த ட்விட்டர் நிறுவனம்..!