சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக மெட்ரோ ரயில் போக்குவரத்து சேவை இயக்கப்பட்டு வருகிறது. விமான நிலையம் முதல் கிண்டி சென்ட்ரல் மார்க்கம் வழியாக வண்ணாரப்பேட்டை வரையிலும், விமான நிலையம் முதல் கோயம்பேடு மார்க்கமாக வழியாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கும் இயங்கி வருகிறது. மெட்ரோ ரயில் நிலையங்களில் பல்வேறு வசதிகள் இருப்பினும் மாற்றுத்திறனாளிகளுக்கு போதிய வசதிகள் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.


இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வைஷ்ணவி என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது, “ சென்னையில் கட்டப்பட்டுள்ள 32 மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் புதியதாக கட்டப்பட்டு வரும் ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையிலான வசதிகள் இல்லை. பல மெட்ரோ ரயில் நிலையங்களில் நகரும் படிக்கட்டுகள் முறையாக இயங்குவது இல்லை. இதனால், பயணிகள் நீண்ட உயரத்தில் உள்ள படிக்கட்டுகளில் ஏறி, இறங்க சிரமம் அடைந்து வருகின்றனர்.




அதுடே, மாற்றுத்திறனாளிகள் என்றால் அவர்கள் கடும் இன்னலுக்கு ஆளாக நேரிடுகிறது. மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தின்படியும், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படியும் மெட்ரோ ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையிலான வசதிகள் இல்லை. இதுதொடர்பாக, மாநில மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


இந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணை நேற்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸவர்நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவுக்கு பதிலளித்த மெட்ரோ ரயில் நிர்வாகம், “ சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான அனைத்து வசதிகளும் 6 வாரங்களில் செய்து கொடுக்கப்படும். புதியதாக கட்டப்படும் ரயில் நிலையங்கள் மாற்றுத்திறனாளிக்கான வசதிகளுடன் கட்டப்படும்” என்று உத்தரவாதம் அளித்தது.




மெட்ரோ ரயில் நிலையத்தின் உத்தரவாதத்தை தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணையை 6 வார காலத்திற்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.


மேலும் படிக்க : DGP sylendra babu: ”நிம்மதி போயிடும்.. இந்த ஆப்ஸையெல்லாம் டெலீட் பண்ணுங்க..” : அறிவுறுத்தும் டிஜிபி சைலேந்திரபாபு..


மேலும் படிக்க : Corona Death : தமிழ்நாட்டில் மூன்று மாதங்களுக்கு பிறகு கொரோனா உயிரிழப்பு.. மீண்டும் அச்சுறுத்தும் பெருந்தொற்று..


 மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண