பெங்களூரு உட்பட எம்ஜிஎம் குழுமத்துக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் சென்னை, நெல்லை, செங்கல்பட்டு மாவட்டம் முட்டுக்காடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. வரி ஏய்ப்பு என வந்த புகார்களின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
 
 
 
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு எம்.ஜி.எம். குழுமம் செயல்படுகிறது. இந்த குழுமம், ஹோட்டல்கள், சரக்கு போக்குவரத்து, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தொழில், மதுபானம் தயாரிப்பு, ரியல் எஸ்டேட் உள்பட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளது. சிங்கப்பூா், இந்தோனேசியா, இலங்கை, மலேசியாவிலும் இந்த குழுமத்திற்கு அலுவலகங்கள் உள்ளன. கடந்த 2007, 2011, 2012 ஆகிய ஆண்டுகளில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 46 ஆயிரம் பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி ரிசர்வ் வங்கி சார்பில் அமலாக்கத் துறையினரிடம் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர்.
 
 
அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் முன்னாள் தலைவர் எம்ஜிஎம் மாறன் சிங்கப்பூரில் பல கோடி ரூபாய் அளவிற்கு பணத்தை வங்கியில் வைத்துக் கொண்டு, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பரிவர்த்தனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டதால், அவருக்கும் 35 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அமலாக்கத் துறையினரின் தொடர் விசாரணையில், எம்ஜிஎம் மாறனுக்குச் சொந்தமான 500 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கப்பட்டது.
 
எம்ஜிஎம் குழுமத்தில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் 40 இடங்களில் எம்ஜிஎம் குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். வெளிநாட்டு முதலீடுகள், வெளிநாடுகளில் முதலீடு செய்த ஆவணங்கள் என பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், ரொக்கம் ஆகியவை இந்த வருமான வரி சோதனையில் சிக்கி உள்ளதாக தெரிகிறது. வருமானத்தை குறைத்துக் காட்டி வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில், எம்ஜிஎம் பொழுதுபோக்கு பூங்கா , எம்ஜிஎம் ரிசார்ட் மதுபான தொழிற்சாலை உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது.
 
 
இந்நிலையில், விழுப்புரத்தில் எம்ஜிஎம் குழுமத்தின் மதுபான ஆலையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நிறுவனத்தின் ஊழியர் சிலர் முக்கிய ஆவணங்களை வயல்வெளிகள் வீசியதை கண்டுபிடித்து வருமானவரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

Continues below advertisement

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

Continues below advertisement

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண