இப்போதெல்லாம் வங்கிகள் நம் இருப்பிடத்திற்கு வந்தே நமக்கு தேவையான கடனை வழங்கும் அளவுக்கு வளர்ந்தாயிற்று. தொழில்நுட்பத்தின் வளர்ச்சியில், மொபைல் செயல்களில் மூலம் கடன் வழங்கும் வசதியும் இருக்கிறது. ஆனால், இதில் பல்வேறு மோசடிகள் நடப்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் இதன் மூலம் ஒருவர் தங்களின் தனிப்பட்ட தகவல்களை திருடி மிரட்டும் புது வித மோசடி குறித்து எச்சரிக்கையுடன் இருங்கள் என்று டி.ஜி.பி. சைலேந்திர பாபு வீடியோ ஒன்றின் மூலம் அறிவுரை கூறி அறிவுறுத்தி உள்ளார்.
கடன் செயலிகளில் மூலம் நடக்கும் மோசடிகளைக் குறிப்பிட்டு சைலேந்திர பாபு பேசியுள்ள ஆடியோவில், நிமிடங்களில் லோன் கிடைத்துவிடும் வகையிலான செயலிகள் பேராபத்திற்கு வழிவகுக்கும் என்று எச்சரித்துள்ளார்.
டி.ஜி.பி. சைலேந்திர பாபு வீடியோவில் கூறியிருக்கும் எச்சரிக்கைச் செய்தி:
குறைந்த வட்டியில் உடனடியாக கடன் தருவதாகக் கூறி தனிப்பட்ட நபர்களின் ஆதார், பான் கார்டு எண், மின்னஞ்சல் விவரங்களை பெறும் ஆன்லைன் செயலிகள், வாடிக்கையாளரின் தொலைபேசியில் உள்ள விவரங்களையும் சட்டவிரோதமாக பதிவிறக்கம் செய்வதாக புகார்கள் எங்களுக்கு தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. இந்த விவரங்களை பயன்படுத்தி வாடிக்கையாளர்களை மிரட்டி பணம் பறிக்கப்படுவதாகவும் புகார்கள் வருகின்றன.
உங்கள் தொடர்பு எண்ணிற்கு வங்கிகள் பெயரில் அனுப்பப்படும் போலியான கடன் வழங்கும் லிங்குகளை வாடிக்கையாளர்கள் தவிர்க்க வேண்டும். அதை கிளிக் செய்யாமல் டெலீட் செய்து விடுங்கள். உங்களின் தனிப்பட்ட தகவல்களையும், ஓடிபி போன்ற ரகசிய எண்களையும் இதுபோன்ற குறுஞ்செய்திகள், தொலைபேசி அழைப்புகளையும் நம்பி தகவல்களை பகிர வேண்டாம்.
கடன் வழங்கும் செயலிகளில் உங்களது ஃபோட்டோ உள்ளிட்ட தனிநபர் சார்ந்த விவரங்களை பதிவு செய்யுமாறு கேட்பார்கள். அதன் அடிப்படையில், உங்களுக்கு ரூ.5000 கடன் வழங்குவார்கள். ஆனால், நீங்கள் அனுப்பும் ஃபோட்டோவை மார்ஃப் செய்து, (கிராப்க்ஸ் தொழில்நுட்பம் பயன்படுத்துதல்) அதை ஆபாச படமாக மாற்றிவிடுவார்கள். பின்னர், அந்த ஃபோட்டோவை உங்களுக்குப் பகிந்து, நீங்கள் ரூ.10000 தவரவில்லை என்றால், உங்களின் ஆபாட ஃபோட்டோவை உங்கள் தெரிந்தவர்களுக்கும் இணையத்திலும் பகிர்ந்து விடுவதாக மிரட்டுவார்கள். பயத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் பலர் பணத்தை எப்படியாவது கொடுத்து விடுகிறார். நம் ஃபோட்டோவை பார்த்தால் யார் என்ன நினைப்பார்களோ என்ற அச்சம். யாரும் உண்மையை நம்ப மாட்டார்கள். நீங்கள்தான் கவனமுடன் இருக்க வேண்டும். உங்கள் காண்டாக்ட் லிஸ்ட்டில் சிலர் பற்றிய தகவல்களை கேட்பார்கள். உங்கள் புகைப்படத்தை ஆபாசமாக மார்ஃபிங் செய்து உங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு அனுப்பிவிடுவோம் என மிரட்டி உங்களிடம் பணம் பறிப்பதை நீங்கள் ஊக்குவிக்கக்கூடாது.
இதனால் உங்களுக்கு நிம்மதி போய்விடும். இந்த ஃபோட்டோ உண்மை இல்லை என்றாலும் மற்றவர்கள் நம்பமாட்டார்கள். இப்படி ஒரு தர்ம சங்கடமான நிலைமையில் சிக்கவைத்து உங்களிடம் பணம் வசூலிக்கும் மோசடிகள் அதிகமாகி வருகின்றன. இதுதொடர்பாக எங்களுக்கு புகார்கள் வந்துள்ளன. இந்த செயலிகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அப்படி செய்தாலும், புதிய பெயர்களில் இந்த மோசடி கும்பல்கள் உளாவுகிறார்கள்.
நீங்கள் ஏமாறக்கூடாது என்பதற்காக சில செயலிகளை சொல்கிறேன். Euvalt, Masen Rupee, Lory loan, Wingo Loan, cici Loan, City cash ஆகிய செயலிகள் மோசடியான செயலிகள். இவற்றை ஒருபோதும் டவுன்லோடு செய்துவிடாதீர்கள். ஒருவேளை உங்கள் ஃபோனில் இந்த செயலிகள் இருந்தால் உடனடியாக டெலீட் செய்துவிடுங்கள். பாதுகாப்பாக இருங்கள்"
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்