சென்னை மாநகராட்சி மேயர் பிரியா சென்ற கார் விபத்துக்குள்ளானது. முன்னால் சென்ற கார் திடீரென திரும்பியதால், மேயர் பிரியா சென்ற கார், முன்னால் சென்ற கார் மீது மோதியது. இது மட்டும் இல்லாமல், மேயர் பிரியா வந்துகொண்டு இருந்த காரின் பின்னால் வந்து கொண்டு இருந்த லாரியும் மோதியதால், மேயர் பிரியா காரின் ஓட்டுநருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்த விபத்தில் மேயர் பிரியாவுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. 


விபத்து காரணமாக சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தினால் மேயர் பிரியாவின் காரின் பின்பகுதி சேதமடைந்துள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் மேயர் பிரியாவை பத்திரமாக மீட்டு மாற்றுக் காரில் அனுப்பினர். இந்த விபத்து தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேயர் பிரியா TN 04 BL 0001 என்ற பதிவு எண் கொண்ட காரில் ஆவடி அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்து கொண்டு இருந்தார். இந்நிலையில், மேயர் பிரியா சென்ற காருக்கு முன்னாள் சென்று கொண்டு இருந்த கார் தீடீரென திரும்பவே, மேயர் பிரியா சென்ற காரை இயக்கி வந்த ஓட்டுநர் கூடுமானவரை காரை கட்டுப்படுத்த முயற்சி செய்துள்ளார். ஆனாலும் கார் முன்னால் சென்ற காரின் மீது மோதியது. இதனால் பின்னால் வந்த லாரியும் மேயர் பிரியா சென்ற காரின் பின் பகுதியில் பலமாகவே மோதியது. இதனால் காரின் பின்பகுதி சேதம் அடைந்தது. இந்த விபத்தினால் மேயர் பிரியாவின் காரினை இயக்கி வந்த ஓட்டுநருக்கு லேசான காயம் ஏற்பட்டது. 


இந்த விபத்திற்கு முக்கிய காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மின் விளக்குகள் எதுவும் சரியாக இயங்காதது என கூறப்படுகின்றது. அதாவது சென்னை - பெங்களூரு நெடுஞ்சலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தது. இதற்கு காரணம் நெடுஞ்சாலையில் உள்ள மின் விளக்குகள் சரியாக இயங்கவில்லை என்ற புகார் பலநாட்களாக இருந்து வந்தது. இந்நிலையில் மேயர் பிரியாவின் கார் விபத்துக்குள்ளாகியுள்ளது. 


இது விபத்தா அல்லது திட்டமிடப்பட்ட சதியா என காவல்துறையினர் மிகத் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.