செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் உயிரியல் பூங்காவை அடுத்து நெடுங்குன்றம் கிராமம் அமைந்துள்ளது. நெடுங்குன்றம் கிராமத்தில் உள்ள பெரிய ஏரியில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக, முதலைகள் வசித்து வருகின்றன. அதேபோல அதன் அருகில் அமைந்துள்ள குளம் ஒன்றிலும், அவ்வப்போது முதலைகள் தென்படுவது வழக்கம். வண்டலூர் வன உயிரியல் பூங்காவில், இருந்த முதலைகள் மூலமாகவே நெடுங்குன்றம் பகுதியில் ,  முதலை சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.



அடிக்கடி ஏரியில் இருக்கும் முதலைகள் அவ்வப்பொழுது ஏரியிலிருந்து வெளியேறி மக்கள் வசிக்கும் பகுதியில் தென்படுவது உண்டு. ஆனால் அப்பகுதியில் வசிக்கும் முதலைகள் மூலமாக மக்கள் உயிருக்கு, இதுவரை எந்த பாதிப்பும் ஏற்பட்டதில்லை. அப்பகுதியில் சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட முதலைகள் இருப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். முதலைகளை பிடிக்க பல்வேறு நடவடிக்கை எடுத்தும் பயனளிக்கவில்லை. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பகுதியில் முதலைகள் போக்கு காட்டி வருகின்றன.

 



இந்நிலையில் நெடுங்குன்றம் கருமாரியம்மன் கோவில் தெரு பகுதியில், ஆறடி நீளம் உள்ள முதலை தென்பட்டு உள்ளது. அதனை அப்பகுதி மக்கள் விரட்டியடிக்க முயன்றுள்ளனர். அது அங்கிருந்து செல்லாமல் இருந்துள்ளது. இதனால் அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து அந்த முதலையை, பிடித்து கட்டி வைத்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் முதலையை கைப்பற்றி, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை புறநகர் பகுதியில் முதலை தென்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 



 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்