செங்கல்பட்டு மாவட்டத்தில் இயங்கி வரும் ஃபோர்டு நிறுவனத்தை அரசே ஏற்று நடத்தக் கோரி, சென்னை ஃபோர்டு நிறுவனத்தின் உரிமைக்கான குழுவினர் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது செய்தியாளர்களை சந்தித்த எல்டியுசி (LTUC) மாநில செயலாளர் பாரதி, "செங்கல்பட்டு மாவட்டத்தில் இயங்கி வரும் ஃபோர்டு நிறுவனத்தில் 2,600 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அந்த நிறுவனத்தை மூடப் போவதாக கூறி, ஊழியர்களுக்கு செட்டில்மெண்ட் பேசி வருகிறார்கள். அரசிடம் முன் அனுமதி இன்றி ஃபோர்டு நிறுவனம் மூடப்படுகிறது. லாபத்தோடு இங்கிருந்து சென்றுவிடலாம் என்று அந்த நிறுவனம் எண்ணுகிறது.



 

குஜராத்தில் இந்த ஃபோர்டு நிறுவனத்தை அரசே ஏற்று நடத்துகிறது. அதேபோல் தமிழ்நாடு அரசும் ஏன் ஃபோர்டு நிறுவனத்தை ஏற்று நடத்தக் கூடாது? இந்த ஃபோர்டு நிறுவனத்தை நம்பி கிட்டத்தட்ட லட்சம் பேர் இருக்கின்றனர். அதனால், ஃபோர்டு நிறுவனத்தை அரசே எடுத்து நடத்த வேண்டும் அல்லது அனைத்து தொழிலாளருக்கும் வேலையை உறுதி செய்ய வேண்டும். எம்ஆர்எப் கம்பெனி ஒருமுறை இதே போன்று நிறுவனத்தை மூடுகிறோம் என்று அறிவித்தார்கள். அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்க வேண்டும், இல்லையென்றால் அரசே இந்த நிறுவனத்தை எடுத்து நடத்தும் என்று தெரிவித்தார். அதற்கு பிறகு அந்த நிறுவனம் தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றியது என தெரிவித்தார்



 

 

என்னதான் ஆனது  ஃபோர்டு

 

உலக அளவில் மிக முக்கிய கார் தயாரிக்கும் நிறுவனமாக ஃபோர்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. சென்னையை அடுத்த மறைமலை நகரில் கடந்த 25 ஆண்டுகளமாக இயங்கி வந்த கார் உற்பத்தி செய்யும் சென்னை ஃபோர்டு தொழிற்சாலையானது கடந்த 10 ஆண்டுகளாக இழப்பை சந்தித்து வருவதாக கூறி தொழிற்சாலையை கடந்த வருடம் ஜூன் மாதம் மூடப் போவதாக நிர்வாகம் அறிவித்தது, இந்நிலையில் கடந்த ஜூலை 31ஆம் தேதி உற்பத்தி நிறுத்தப்பட்டது .



 

கோடிக்கணக்கில் இழப்பு

 

அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு  இந்தியாவில் சுமார் 20 ஆண்டுகளாக வாகனங்களை உற்பத்தி செய்து வந்தது இந்த ஆலைகளில் வருடத்திற்கு நான்கு லட்சம் கார்கள் உற்பத்தி செய்ய முடியும் என்ற நிலையில் தற்போது 80 ஆயிரம் கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன . இதனால் ஃபோர்டு நிறுவனம் தொடர்ந்து பெரும் நஷ்டத்தில் இயங்கி வந்தது. இதனால் 14,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதால் இந்த கடந்த மாதம் ஜூலை 31ஆம் தேதி முழுமையாக உற்பத்தியை நிறுத்தியது. இந்த நிலையில் தான் ஊழியர்களின்  தரப்பினால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.