செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் பகுதியை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி மனோகர். இவரது மகள் ரக்சயா(20), கல்லூரி படிப்பை முடித்துள்ளார். தன்னுடைய சிறு வயது முதல் தான் அழகிப் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற லட்சியத்தோடு, குடும்ப வறுமையையும் பொருட்படுத்தாமல் தனது சொந்த முயற்சியில் பகுதி நேர வேலை செய்து தன்னை தயார்படுத்தி கொண்டார்.

 

கடந்த 2018-ஆம் ஆண்டு நடந்த மோனோ ஆக்டிங் நிகழ்வில் கலந்துகொண்டு வெற்றி பெற்று அரசு சார்பில் மலேசியா அழைத்து சென்று கெளரவித்தனர். 

 

அதன் முயற்சியாக கடந்த பிப்ரவரி மாதம் Forever Star India Awards நடத்திய மாவட்ட அளவிலான அழகிகள் போட்டியில் தேர்வாகி பின்னர் மாநில அளவிலான போட்டி இந்த மாதம் ஜெய்ப்பூரில் 18-ஆம் தேதி முதல் 21-ஆம் வரை நடந்த போட்டியில் ஆயிரக்கணக்கானோர், இந்தியா முழுவதிலும் இருந்து வந்து கலந்து கொண்டதில் தமிழகத்தை சேர்ந்த இளம்பெண் மிஸ் தமிழ்நாடு பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார். அதேபோல் அனைத்து மாநிலங்களிலும் வின்னர், ரன்னர் என சுமார் 750 பேர் இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.
  மேலும் வருகிற டிசம்பர் மிஸ் இந்தியா அழகிப்போட்டியில் இந்தியா முழுவதும் தேர்வாகிய வின்னர், ரன்னர் என அனைவரும் ஸ்டேஜ் ஷோ செய்ய உள்ளனர். இதில் தேர்வாகும் நபர் மிஸ் இந்தியா பட்டத்தை வெல்ல உள்ளார்.  நிச்சயம் மிஸ் இந்தியா பட்டத்தை தட்டிச்செல்வேன் என்று நம்பிக்கையோடு சொல்கிறார் தமிழகத்தை சேர்ந்த இளம்பெண் ரக்சயா.

 



 

இதுகுறித்து பெற்றோர்கள் கூறுகையில், சிறு வயது முதலே விளையாட்டின் மீது ஆர்வமாக இருந்து வந்தால் என் மகள். இதனை தொடர்ந்து நாங்களும் அவரை ஊக்கப்படுத்தியதால் படிப்படியாக வளர்ந்து, ஆங்கர் வேலை உள்ளிட்ட நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வந்தார்.

 

நாங்கள் தொடர்ந்து வறுமையில் இருந்தபொழுது சிலர் என் மகளின் படிப்புச் செலவை ஏற்று, கொண்ட காரணத்தினால், அவள் மேல் படிப்பை தொடர்ந்து விடாமுயற்சியாக அவள் செயல்பட்டு வந்த காரணத்தினால், தற்பொழுது மிஸ் தமிழ்நாடு என்ற பட்டத்தை வென்றுள்ளார். இதனை அடுத்த அவர் மிஸ் இந்தியா போட்டிக்கும் செல்ல உள்ளார் அதிலும் கண்டிப்பாக வெற்றி பெறுவார் என நம்புகிறோம் என தெரிவித்தனர்.