வடகிழக்கு பருவ மழை காரணமாக செங்கல்பட்டு சுற்று வட்டார ஏரிகள் நிரம்பி வெளியேறிய உபரி நீர், செங்கல்பட்டு, வல்லம், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நான்கு நாட்களாக தேங்கியுள்ளது. விடாத மழையால் எங்கு பார்த்தாலும் தண்ணீர் இருப்பதால், பொதுமக்கள் பெருமளவில் வீடுகளில் முடங்கியுள்ளனர் . குறிப்பாக ஊரப்பாக்கம் பகுதியில் ஜெகதீஷ் நகர், செல்வராஜ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் 10 நாட்களுக்கும் மேலாக தண்ணீர் தேங்கியுள்ளது
இந்நிலையில் சென்னை அடுத்துள்ள ஊரப்பாக்கம் ஜெகதீசன் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் தரைத்தளத்தில் உள்ள வீட்டில் தரை சுமார் எட்டு அடி ஆழத்திற்கு பள்ளம் இறங்கியது. இந்த வீட்டில் குணசேகரன் ஸ்ரீவித்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த வீட்டை டிடிசிபி அப்ரூவல் உள்ளதாக வீட்டை வாங்கி உள்ளனர். இந்த வீட்டின் பின் பகுதியில் மழைநீர் வடிகால் கால்வாய் உள்ளது. அந்த கால்வாய் 30 அடி கொண்டது. அந்தக் கால்வாய் ஆக்கிரமிப்பாளர்களால் சுருங்கி உள்ளது.
இந்நிலையில் வட கிழக்கு பருவமழையால் தொடர்ந்து பெய்து வந்த கனமழையும் எதிரொலியாக, குணசேகரன் வீட்டின் பின்புறம் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இதன் காரணமாக அவர் வீட்டின் பின்புறம், பள்ளம் ஏற்பட்டு அருகிலிருந்த குணசேகரன் வீட்டையும் விட்டு வைக்காமல், அருகில் இருந்த குணசேகரன் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.
நீரின் வேகத்தால் வீட்டின் அடியில் இருந்த மண் அழிக்கப்பட்டது, இதன் காரணமாக வீட்டின் நடு ஹாலில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டது. இதனால் வீட்டில் நடு புறத்தில் தரை உடைந்து பயங்கர சத்தத்துடன் தரை பள்ளமானது . தற்போது அதன் வீட்டில் உள்ள அனைத்து மண்ணும் அடித்துச் செல்லப்பட்டது. சம்பவம் நடந்தபோது இருவரும் வீட்டில் வேறு பகுதியில் இருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். வீட்டில் பள்ளம் ஏற்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்