சென்னையின் மிகவும் முக்கியமான பகுதியாக உள்ளது அம்பத்தூர். இங்கு ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளது. இந்த நிலையில், அம்பத்தூர் தொழிற்பேட்டையில் கோதுமை சேமிப்பு கிடங்கு ஒன்று பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது.


இந்த நிலையில், இன்று இரவு திடீரென அந்த சேமிப்பு கிடங்கில் திடீரென தீப்பற்றி எரிந்தது. கோதுமை கிடங்கில் பிடித்த தீ மளமளவென பற்றி எரிந்தது. இதனால், அங்கிருந்த பணியாளர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனடியாக காவல்துறையினருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.


இதையடுத்து, எழும்பூர் தீயணைப்பு நிலையத்தில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டது. சுமார் 2 மணி நேரமாக கோதுமை கிடங்கில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர். தீயை அணைப்பதற்காக 30க்கும் மேற்பட்ட லாரிகளில் சென்னை மெட்ரோ தண்ணீர் லாரிகளும் வரவழைக்கப்பட்டது. அம்பத்தூரில் கோதுமை கிடங்கில் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.