இதன்படி, திருவொற்றியூர் மண்டலத்தில் 14 ஆயிரத்து 619 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு குணம் அடைந்துள்னர். 248 பேர் அந்த மண்டலத்தில் உயிரிழந்துள்ள சூழலில், 75 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மணலி மண்டலத்தில் 7 ஆயிரத்து 830 பேர் குணம் அடைந்துள்ளனர். 76 பேர் உயிரிழந்துள்ள சூழலில், 52 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாதவரம் மண்டலத்தில் 19 ஆயிரத்து 818 நபர்கள் குணம் அடைந்துள்ளனர். 243 பேர் அந்த மண்டலத்தில் உயிரிழந்துள்ள சூழலில், 80 பேர் தற்போது அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


தண்டையார்பேட்டை மண்டலத்தில் 34 ஆயிரத்து 741 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். அங்கு 540 பேர் உயிரிழந்துள்ள சூழலில், 173 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். ராயபுரம் மண்டலத்தில் 37 ஆயிரத்து 183 பேர் குணம் அடைந்துள்ளனர். 588 நபர்கள் உயிரிழந்துள்ள சூழலில், 143 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். திரு.வி.க. நகர் மண்டலத்தில் 40 ஆயிரத்து 428 நபர்கள் குணம் அடைந்துள்ளனர். 833 நபர்கள் உயிரிழந்துள்ள சூழலில், 199 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.




அண்ணாநகர் மண்டலத்தில் 54 ஆயிரத்து 583 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 953 நபர்கள் இந்த மண்டலத்தில் உயிரிழந்துள்ள சூழலில், 219 நபர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். தேனாம்பேட்டை மண்டலத்தில் 48 ஆயிரத்து 753 நபர்கள் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு சிகிச்சை பெற்று வரும் சூழலில், 945 நபர்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அங்கு 239 நபர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். கோடம்பாக்கம் மண்டலத்தில் 51 ஆயிரத்து 562 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 929 நபர்கள் உயிரிழந்துள்ள சூழலில், 200 பேர் தற்போது அந்த மண்டலத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வளசரவாக்கம் மண்டலத்தில் 34 ஆயிரத்து 984 நபர்கள் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். 449 நபர்கள் கொரோனாவால் உயிரிழந்துளள நிலையில், தற்போது 114 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.




ஆலந்தூர் மண்டலத்தில் 24 ஆயிரத்து 108 நபர்கள் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்துள்ளனர். 366 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 126 பேர் அங்கு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். அடையாறு மண்டலத்தில் 43 ஆயிரத்து 902 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். 662 நபர்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ள சூழலில், தற்போது 214 பேர் இந்த மண்டலத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெருங்குடி மண்டலத்தில் 24 ஆயிரத்து 940 பேர் குணம் அடைந்துள்ளனர். 333 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 121 நபர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 16 ஆயிரத்து 96 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்துள்ளனர். 133 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 62 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு அந்த புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளது.