அந்த அறிவிப்பின்படி, திருவொற்றியூர் மண்டலத்தில் 14 ஆயிரத்து 609 பேர் குணம் அடைந்துள்ளனர். அந்த மண்டலத்தில் 248 பேர் உயிரிழந்துள்ள சூழலில், 70 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மணலி மண்டலத்தில் 7 ஆயிரத்து 826 நபர்கள் குணம் அடைந்துள்ளனர். மணலியில் மட்டும் 76 நபர்கள் உயிரிழந்துள்ள சூழலில், 55 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாதவரம் மண்டலத்தில் 19 ஆயிரத்து 806 நபர்கள் கொரோனாவில் இருந்து மீண்டுள்ள சூழலில், 243 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த மண்டலத்தில் 86 நபர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தண்டையார்பேட்டையில் 34 ஆயிரத்து 707 நபர்கள் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்துள்ளனர். 201 நபர்கள் தற்போது சிகிச்சை பெற்று வரும் சூழலில், 540 பேர் அந்த மண்டலத்தில் உயிரிழந்துள்ளனர். ராயபுரம் மண்டலத்தில் 37 ஆயிரத்து 147 நபர்கள் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்துள்ள சூழலில், 588 நபர்கள் அந்த மண்டலத்தில் உயிரிழந்துள்ளனர். 170 நபர்கள் தற்போது அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திரு.வி.க. நகர் மண்டலத்தில் 40 ஆயிரத்து 391 நபர்கள் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். 211 பேர் தற்போது அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 833 பேர் அந்த மண்டலத்தில் உயிரிழந்துள்ளனர். அம்பத்தூர் மண்டலத்தில் 41 ஆயிரத்து 986 நபர்கள் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ள சூழலில், 157 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். 654 நபர்கள் அங்கு உயிரிழந்துள்ளனர். அண்ணாநகர் மண்டலத்தில் 54 ஆயிரத்து 550 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். 951 பேர் உயிரிழந்துள்ள சூழலில், 235 பேர் குணம் அடைந்துள்ளனர், தேனாம்பேட்டை மண்டலத்தில் 48 ஆயிரத்து 729 பேர் குணம் அடைந்துள்ள சூழலில், 245 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். 944 பேர் அந்த மண்டலத்தில் உயிரிழந்துள்ளனர். கோடம்பாக்கம் மண்டலத்தில் 51 ஆயிரத்து 529 நபர்கள் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். 227 பேர் அங்கு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். 929 நபர்கள் கொரோனா பாதிப்பால் அங்கு உயிரிழந்துள்ளனர்.
வளசரவாக்கம் மண்டலத்தில் 34 ஆயிரத்து 976 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்துள்ளனர். 449 பேர் உயிரிழந்துள்ள சூழலில், அங்கு 108 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆலந்தூர் மண்டலத்தில் 24 ஆயிரத்து 100 பேர் குணம் அடைந்துள்ள சூழலில், 123 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். 366 பேர் அங்கு உயிரிழந்துள்ளனர்.
அடையாறு மண்டலத்தில் 43 ஆயிரத்து 872 நபர்கள் குணம் அடைந்துள்ள சூழலில், 662 பேர் அந்த மண்டலத்தில் உயிரிழந்துள்ளனர். 228 நபர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பெருங்குடி மண்டலத்தில் 24 ஆயிரத்து 928 நபர்கள் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்துள்ளனர். 333 பேர் உயிரிழந்துள்ள சூழலில், அங்கு 117 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 16 ஆயிரத்து 802 நபர்கள் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்துள்ள சூழலில், 133 பேர் அங்கு உயிரிழந்துள்ளனர். தற்போது 71 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.