இதன்படி, திருவொற்றியூர் மண்டலத்தில் 14 ஆயிரத்து 665 நபர்கள் குணம் அடைந்துள்ளனர். 250 அந்த மண்டலத்தில் உயிரிழந்துள்ள நிலையில், 69 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மணலி மண்டலத்தில் 7 ஆயிரத்து 871 நபர்கள் குணம் அடைந்துள்ளனர். 76 பேர் அந்த மண்டலத்தில் உயிரிழந்துள்ள நிலையில், 33 பேர் அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாதவரம் மண்டலத்தில் 19 ஆயிரத்து 876 பேர் குணம் அடைந்துள்ளனர். 244 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 67 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். தண்டையார்பேட்டை மண்டலத்தில் 34 ஆயிரத்து 877 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 540 பேர் அங்கு உயிரிழந்துள்ள நிலையில், 122 பேர் தற்போது அங்கு சி்கிச்சை பெற்று வருகின்றனர். ராயபுரம் மண்டலத்தில் 37 ஆயிரத்து 290 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 589 பேர் அங்கு உயிரிழந்துள்ளனர். 128 பேர் அந்த மண்டலத்தில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திரு.வி.க. நகர் மண்டலத்தில் 40 ஆயிரத்து 572 பேர் குணம் அடைந்துள்ளனர். 835 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 147 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். அம்பத்தூர் மண்டலத்தில் 42 ஆயிரத்து 120 பேர் சிகிச்சை பெற்று குணம் அடைந்துள்ளனர். 659 பேர் அந்த மண்டலத்தில் உயிரிழந்துள்ள சூழலில், 104 பேர் அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அண்ணாநகர் மண்டலத்தில் 54 ஆயிரத்து 749 பேர் குணம் அடைந்துள்ளனர். 955 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 149 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தேனாம்பேட்டை மண்டலத்தில் 48 ஆயிரத்து 940 பேர் குணம் அடைந்துள்ளனர். 950 பேர் அங்கு உயிரிழந்துள்ள நிலையில், 165 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். கோடம்பாக்கம் மண்டலத்தில் 51 ஆயிரத்து 717 பேர் குணம் அடைந்துள்ளனர். 931 பேர் அங்கு உயிரிழந்துள்ள நிலையில், 141 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வளசரவாக்கம் மண்டலத்தில் 35 ஆயிரத்து 67 நபர்கள் குணம் அடைந்துள்ளனர். 452 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அந்த மண்டலத்தில் 114 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆலந்தூர் மண்டலத்தில் 24 ஆயிரத்து 208 நபர்கள் குணம் அடைந்துள்ளனர். 367 பேர் அங்கு உயிரிழந்துள்ள நிலையில், தற்போது 72 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அடையாறு மண்டலத்தில் 44 ஆயிரத்து 60 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். 663 பேர் அந்த மண்டலத்தில் உயிரிழந்துள்ள நிலையில், 159 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். பெருங்குடி மண்டலத்தில் 25 ஆயிரத்து 21 பேர் குணம் அடைந்துள்ள நிலையில், 339 பேர் அங்கு உயிரிழந்துள்ளனர். 103 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 16 ஆயிரத்து 139 பேர் குணம் அடைந்துள்ளனர். 135 பேர் உயிரிழந்துள்ள சூழலில், 43 பேர் அங்கு குணம் அடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கொரோனா தினசரி பாதிப்பு பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக சுமார் 2,700 என்ற அளவில் பதிவாகியுள்ளது. கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்ததை அடுத்து, இன்று முதல் கடைகள் திறப்பிற்கு கூடுதலாக மேலும் 1 மணிநேரம் அவகாசம் அளித்து 9 மணிவரை கடைகளை திறக்க மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும், சென்னையில் இன்று முதல் மெட்ரோ ரயில் 10 மணிவரை இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.