சென்னை காவல்துறையில் ஆய்வாளர்களாக பணிபுரியும் 179 பேரை பணியிடை மாற்றம் செய்து காவல்துறை ஆணையர் ஷங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இவர்கள் அனைவரையும் மேல் அதிகாரிகள் உடனடியாக புதிய இடங்களில் பணியாற்ற விரைவில் அனுப்ப வேண்டும் என்றும் இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. அதன்படி அடையாறு, வேளச்சேரி, விருகம்பாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்த காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 




அதன்படி அடையாறு காவல் ஆய்வாளராக இருந்த ஆதவன் பாலாஜி தற்போது ஆர்-2 கோடம்பாக்கம் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். ஜி டில்லி பாபு அம்பத்தூர் காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். ஆயிரம் விளக்கு  எஃப்-4 காவல் நிலையத்திலிருந்து ஆய்வாளர் எம் ஶ்ரீனிவாசன் மயிலாப்பூர் இ-1 காவல்நிலையத்தின் குற்றப்பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார். சூளைமேடு எஃப்-5 காவல் நிலையத்தில் ஆய்வாளராக இருந்த என்.இளங்கோவன்  அண்ணா சாலை டி-2 காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். பூந்தமல்லி டிஐடபிள்யூ காவல் ஆய்வாளராக இருந்த கௌசல்யா காசிமேடு டிஐடபிள்யூ காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். 




மயிலாப்பூர் இ-1 காவல்நிலையத்தில் ஆய்வாளராக இருந்த மீனாட்சி சுந்தரம் அடையாறு ஜே-2 காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். வேளச்சேரி குற்றப்பிரிவு ஆய்வாளராக இருந்த கமலகண்ணன் நீலாங்கரை காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். தாம்பரம் எஸ்-11 காவல் ஆய்வாளர் ஆல்பின் ராஜ் கண்ணி நகர் ஜே-11 காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். வடபழனி ஆர்-8 ஆய்வாளர் புருஷோத்தமன் பேசின் பிரிட்ஜ் பி-4 காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். 


எழும்பூர் எஃப்-2 ஆய்வாளர் ரஞ்சித் குமார் சிட்லபாக்கம் எஸ்-12 காவல்நிலையத்தின் குற்றப்பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார். மணலி எம்-11 ஆய்வாளர் ஶ்ரீஜா மாதவரம் எம்-1 காவல் நிலையத்தின் குற்றப்பிரிவிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். என்னூர் எம்-5 காவல் ஆய்வாளர் எஸ்.ராஜேஸ்வரி சாத்தான்காடு எம்8 சட்ட ஒழுங்கு பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார். உயர்நீதிமன்ற பாதுகாப்பில் இருந்த ஆய்வாளர் எஸ்.ஜெயகிருஷ்ணன் ஆவடி டி-6 குற்றப்பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார். ஓட்டேரி பி-2 ஆய்வாளர் கோமதி செம்பியம் கே-1 குற்றப்பிரிவிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 




சைதாப்பேட்டை காவல் ஆய்வாளர் எம்.தெய்வநாயகி திருவல்லிகேனி காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். இவர்களை போல் மேலும் சில ஆய்வாளர்கள் சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த அறிவிப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ள ஆய்வாளர்களை சென்னையில் உள்ள உதவி ஆணையர்கள் உடனடியாக விடுவித்து விரைவில் புதிய இடங்களில் பணியில் சேர வழிவகை செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர்கள் புதிய இடத்தில் எப்போது பணியில் சேர்வார்கள் என்ற தகவலையும் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்று இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னை மாநகரில் ஒரே நாளில்  179 ஆய்வாளர்கள் மாற்றப்பட்டுள்ளது  பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் படிக்க:சென்னை கொரோனா பாதிப்பு : மண்டல வாரியாக இன்றைய முழு விவரம்..!