தாம்பரம் -  கோவளம் செல்லும் மாநகரப் பேருந்தில் கட்டப்பை ஒன்றில் ஆறு சவரன் தங்க நகை தவற விட்டதை நடத்துனர் மற்றும் ஓட்டுநர் கேளம்பாக்கம் காவல் துறையினர் ஒப்படைத்தது மனிதநேயத்தை ஏற்படுத்தியது.

 

மாநகரப் பேருந்தில் தவறவிட்ட நகை

 

செங்கல்பட்டு (Chengalpattu News): செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே கோவளம் பகுதியில் சென்னை மாநகர பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் பேருந்தில் கட்ட பேக் ஒன்றை தவற விட்டு சென்றுள்ளார். தாம்பரத்தில் இருந்து கோவளம் அந்த 515a மாநகர பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பயணிகளை கோவளத்தில் விட்டு மீண்டும் தாம்பரம் செல்லும் பொழுது காட்டப்பை ஒன்றில் 6 சவரன் தங்க நகை மற்றும் துணிமணிகள்  தவற விட்டு சென்றதை நடத்துனர் ஓட்டுனரிடம் கூறியுள்ளனர்.

 

 


தவறவிடப்பட்ட தங்க நகை


 

காவல்துறையிடம் ஒப்படைப்பு

 

இதனை மனித நேயம் கொண்ட நடத்துனர் மற்றும் ஓட்டுநர் பேருந்தை கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் நிறுத்தி ஆறு சவரன் தங்க நகையை காவல்துறையிடம் ஒப்படைத்தனர். (இதன் மதிப்பு சுமார் மூன்று லட்சம் என்பதும்) சிறிது நேரத்தில் நகை காணவில்லை என்று பெண் ஒருவர் தன் குடும்பத்துடன் அழுது கொண்டு கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வந்துள்ளனர். அப்போது, மாநகரப் பேருந்து ஓட்டுநர் மணிமங்கலம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (வயது 47) மற்றும் நடத்துனர் மதுராந்தகம் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (வயது 38) உள்ளிட்டோர் கட்ட பாக்கு ஒன்று பேருந்தில் இருந்ததை காவல்துறையிடம் ஒப்படைத்ததாக கூறியுள்ளனர்.

 


போலீசார் முன்னிலையில் நகையை ஒப்படைக்கும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்


 

காவல்துறையினர் தீவிர விசாரணை

 

இதனைத் தொடர்ந்து கேளம்பாக்கம் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவல் துறையினர் அவர்களிடம் விசாரித்த போது, பூந்தமல்லி அருகே செம்பரம்பாக்கம் பகுதியை சேர்ந்த சுதாகர் மனைவி சுதா (வயது 33) என்பதும் தன் குடும்பத்திடம் தாம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து கோவளம் அருகே திருவிடந்தை உறவினர் வீட்டுக்கு நிச்சயதார்த்தம் நிகழ்ச்சிக்கு வந்ததாகவும், அப்போது கையில் இருந்த கட்ட பேக் பேருந்திலையே விட்டுச் சென்றதாக கூறியுள்ளனர்.

 


போலீசார் முன்னிலையில் நகையை ஒப்படைக்கும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்


 

இரு கைகூப்பி கும்பிட்டு நன்றி

 

அதில், தங்கச் சங்கிலி மற்றும் தங்க நகை ஆகிய 6 சவரன் தங்க நகை இருந்ததை காவல்துறை இடம் கூறியதன் பெயரில் போலீசார் ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் மீட்டர் நகையை சம்பந்தப்பட்ட நபரிடம் ஒப்படைத்தனர். இதனால் நடத்துனர் மற்றும் ஓட்டுநரை சுதா மற்றும் குடும்பத்தினர் கைகூப்பி கும்பிட்டு நன்றிகளைத் தெரிவித்தனர்.

 

 


போலீசார் முன்னிலையில் நகையை ஒப்படைக்கும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்


பேருந்தில் தவறவிட்ட 6 சவரன் தங்க நகையை நடத்துனர் மற்றும் ஓட்டுநர் காவல்துறையிடம் ஒப்படைத்த மனிதநேய செயலாளர் கேளம்பாக்கம் காவல்துறையினர் அவர்களை வெகுவாக பாராட்டினர். அவ்வப்பொழுது சாமானிய மக்கள் செய்யும் இது போன்ற சம்பவங்கள் மூலம், மனிதநேயம் மீண்டும் உயிர் பிழைக்கிறது.