சென்னை அண்ணா நகர் ரவுண்டானா பேருந்து நிலையத்தில் நேற்று மதியம் 2 மணியளவில் அண்ணாநகர் சுற்று வட்டாரத்தில் உள்ள கல்லூரி மாணவ, மாணவிகள் நின்றுகொண்டிருந்தனர். அப்பொழுது அண்ணாநகரில் இயங்கி வரும் பிரபல  தனியார் கல்லூரி மாணவிகளும் அங்கு வந்தனர். இந்த நிலையில் அந்தக் கல்லூரியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருக்கும், அருகில் நின்று கொண்டிருந்த முதலாம் ஆண்டு படித்து வரும் மற்றொரு மாணவிக்கும் இடையே தகறாறு ஏற்பட்டது. இந்தத்தகராறு ஒரு கட்டத்தில் முற்றி, பயங்கர மோதலாக மாறியது. இந்த மோதலில் ஒருவரையொருவர் தலைமுடியை பிடித்து சண்டையிட்டனர். 


அப்போது அவர்கள், தனது காதலனுடன் ஏன் பேசுகிறாய் எனக்கேட்டு இருவரும் மோதி கொண்டனர். இந்த மோதலை அங்கிருந்துவர்கள் ரசித்ததோடு, மொபைல் போனிலும் வீடியோ எடுத்தனர். இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.


இரு மாணவிகளுக்கு இடையே காதல் பிரச்னை விவகாரத்தால் மோதல் ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில் அது தொடர்பாக கல்லூரி நிர்வாகமும் விசாரணை நடத்திவருவதாக கூறப்படுகிறது. இதேபோன்று கடந்த டிசம்பர் மாதம் பள்ளி மாணவிகளிடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டு ஆவடி பேருந்து நிலையத்தில் அடித்துக் கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் தற்பொழுது இந்த வீடியோவும் பெரும் பேசும் பொருளாக மாறியுள்ளது..


 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண