சென்னை கொடுங்கையூர் குப்பை மேடு பகுதிக்கு அடிக்கடி கல்லூரி மாணவர்கள் சிலர் வந்து செல்வதாக கொடுங்கையூர் போலீசாருக்கு  ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அந்தப் பகுதியை தீவிரமாக கண்காணித்து வந்த கொடுங்கையூர் போலீசார் சில கல்லூரி மாணவர்கள் குப்பை மேடு பகுதிக்கு வருவதை பார்த்து அவர்களை மடக்கி சோதனை செய்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். இதனையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் குப்பை மேடு பகுதிக்கு சிலர் தினமும் வந்து சில்லரை விலையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.  இதனையடுத்து அங்கு மறைந்திருந்த போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வந்த  வடபெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பால் மார்ட்டின் 31 நங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த தினேஷ் 30 விருகம்பாக்கம் வெங்கடேஸ்வரா நகர் பகுதியைச் சேர்ந்த பாலு 36 ஆகிய மூன்று பேரையும் மடக்கி பிடித்தனர்.  அவர்களிடமிருந்து சிறு சிறு பெட்டலங்களாக 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்படடது. கல்லூரி மாணவர்களை எச்சரித்து அனுப்பி வைத்த போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 



 

2 கடந்த 5 வருடங்களாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த ரவுடி வியாசர்பாடியில் கைது

 



 

சென்னை வியாசர்பாடி பி. கல்யாணபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சாரா என்கின்ற சரவணன் 30 இவர் மீது வியாசர்பாடி ,எம்.கே.பி நகர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் அடிதடி வழக்கு ஒன்றில் எழும்பூர் 10 வது  நீதிமன்றத்தில் கடந்த 5 வருடங்களாக ஆஜராகாமல் இருந்த சரவணன் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. இதனையடுத்து வியாசர்பாடி போலீசார் அவரை தேடி வந்த நிலையில் வியாசர்பாடி கூட்செட் பகுதியில் வைத்து வியாசர்பாடி  போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சரவணன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.