தமிழ்நாடு முழுவதும் நேற்று முன்தினம் முதல் பரவலாக மழை பெய்து வந்த நிலையில், நேற்று முதல் மழை தீவிரமாக பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் மழை கொட்டித் தீர்த்ததால் மக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இதையடுத்து, நேற்று சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
சென்னையில் விடுமுறையா?
இந்த நிலையில், நேற்று இரவும் சென்னையில் பரவலாக மழை பெய்ததால் இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா? என்று மாணவர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்தது. சென்னையில் காலை முதல் தூறல் பெய்து வந்தாலும் இன்று பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை புறநகர் பகுதிகளிலும் திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் அங்கும் பள்ளிகள் இயங்குமா? என்று கேள்விகள் எழுந்தது. ஆனால், திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களிலும் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எந்த மாவட்டங்களுக்கு விடுமுறை?
அதேசமயம் திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அந்த 2 மாவட்டங்களில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் இன்று 13 மாவட்டங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது.
கடந்த 24 மணி நேரத்தில் சென்னை, மீனம்பாக்கத்தில் 40 மி.மீட்டர் கனமழையும், நுங்கம்பாக்கத்தில் 57 மி.மீட்டர் கனமழையும் பதிவாகியிருந்தது. அடுத்த 3 மணி நேரத்திற்கு அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் ஆகிய 14 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முன்னெச்சரிக்கை ஏற்பாடு:
சென்னையில் நேற்று முன்தினம் முதல் மழை பெய்து விட்டுவிட்டு பெய்து வருவதால் சாலைகளில் தண்ணீர் கடுமையாக தேங்கியது. இதையடுத்து பல்வேறு சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியது. பின்னர், தேங்கிய தண்ணீரை அகற்றினர். மழை பாதிப்பை சரி செய்வதற்காக சென்னையில் மட்டும் 4 ஆயிரம் களப்பணியாளர்கள் களத்தில் உள்ளதாகவும், 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை செயல்படுவதாகவும் மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும், பொதுமக்களின் அவசர உதவிக்காக சிறப்பு எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: Rain in Tamilnadu: மழை இன்னும் ஓயல... அடுத்த 2 மணிநேரத்திற்கு 14 மாவட்டங்களில் மழை...! எங்கெல்லாம்? முழு விவரம்
மேலும் படிக்க: TN Rains: 4 ஆயிரம் பணியாளர்கள்.. 24 மணி நேர கண்காணிப்பு.. எந்த மழையையும் எதிர்கொள்ள தயார் - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.