சென்னையில் இன்று இந்த வருடத்தின் அதிகபட்ச வெப்ப நிலை பதிவாகியுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு வெதர் மேன் பிரதீப் ஜான் தனது பேஸ்புக் பக்கத்தில், “ சென்னை நுங்கம்பாகத்தில் 40 டிகிரி செல்சியஸ் அளவிற்கான வெப்பநிலையும், மீனம்பாக்கத்தில் 40.1 டிகிரி செல்சியஸ் அளவிற்கான வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்த வெப்ப நிலையானது வரும் காலத்தில் தொடரலாம் அல்லது அதிகரிக்கலாம்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியுள்ள நிலையில், சென்னையில் இன்று வேறு எந்த பகுதியிலும் பதிவாக வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்த வெப்பநிலையானது இந்த வருடத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மே மாதத்தில் சென்னை மற்றும் வட மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்தது. இதனையடுத்து ஆந்திர பிரதேசத்தில் அசானி புயல் தாக்கியதால் தமிழ்நாட்டிலும் மழை பெய்தது. அதனைத்தொடர்ந்து வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் தமிழ்நாட்டிலும் மழை நீடித்தது. சென்னையிலும் சில இடங்களில் மழை பெய்தது.
ஆனால் கடந்த 3 நாட்களாக சென்னையில் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த 3 நாட்களில் சென்னையில் பல்வேறு இடங்களில் 36 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், சில பகுதிகளில் 37 -38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்த நிலையில் இன்று இந்த ஆண்டிலேயே இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக சென்னையில் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்