ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த சில மாதங்களுக்கு பின்பு கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் 20 க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சொல்லப்பட்ட திருவேங்கடம் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார். பின்பு , அவ்வப்போது இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மற்றும் சரித்திர பதிவேடு குற்றவாளிகளை காவல் துறையினர் கைது செய்வதும் , காக்கா தோப்பு பாலாஜியை என் வுண்டர் செய்யப்பட்டதும் நாம் அனைவரும் அறிந்ததே..
இதனை தொடர்ந்து , சரித்திர பதிவேடு குற்றவாளியான சீசிங் ராஜா ஆந்திராவில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு , சென்னை நீலாங்கரையில் இன்று காலை என்கவுண்டர் செய்யப்பட்டார்.
இது குறித்து அடையாறில் உள்ள துணை ஆணையர் அலுவலகத்தில் சென்னை தெற்கு மண்டல இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் ;
காவல் துறையின் சிறப்பு பிரிவினர் ஆந்திரா அருகில் வேறு ஒரு வழக்குக்காக சென்ற நிலையில் , சீசிங் ராஜா அங்கு இருப்பதாக தகவல் வந்ததை தொடர்ந்து கடப்பாவில் அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரை விசாரிக்கும் பொழுது அவர் ஆயுதங்களை சென்னை நீலாங்கரையில் பதுக்கி வைத்திருப்பதாக கூறியிருந்தார்.
அதன் அடிப்படையில் சீசிங் ராஜா பதுக்கி வைத்திருந்த ஆயுதங்களை எடுப்பதற்காக நீலாங்கரைக்கு அவரை அழைத்து சென்று விசாரிக்கும் பொழுது அவர் அங்கே பதுக்கி வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சப் இன்ஸ்பெக்டரை இரண்டு முறை சுட்டுள்ளார் எனவே தற்காப்புக்காக எங்களது காவலர்கள் அவரை மார்பு மற்றும் மேல் வயிறு பகுதிகளில் சுடவேண்டிய நிலை ஏற்பட்டது.
6 கொலை வழக்கு உட்பட 39 வழக்குகள்
மூன்று மாதத்திற்கு முன்பு 10 வழக்குகள் பெண்டிங்கில் இருந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தினால் இவரை தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
வேளச்சேரியில் துப்பாக்கி முனையில் பணம் பறித்ததற்கான வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளியாக சீசிங் ராஜா கைது செய்யப்பட்டார்.
எங்களது விசாரணை பொறுத்தவரை ஆம்ஸ்ட்ராங் வழக்கிற்கும் சீசிங் ராஜாவிற்கும் சம்பந்தம் இருப்பதாக எங்களுக்கு தெரியவில்லை.நாங்கள் வேளச்சேரி வழக்கு தொடர்பாக மட்டுமே சீசிங் ராஜாவே கைது செய்துள்ளோம்.
குற்றவாளியை பிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைப்பதே எங்களது நோக்கம் ஆனால் வேறு வழி இல்லாமல் தற்காப்பிற்காக சுட வேண்டிய நிலை ஏற்பட்டது என காவல் துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.